
தொழுகையில் நிற்கும் போது
ஷைத்தான் தூக்கத்தின் மூலமாக நம்மை வழிக்கெடுக்க முயற்சிக்கும் போது அந்த செயலை நாம் முறியடித்து விட்டால் அவனுடைய முயற்சி வீணாகி விடுகிறது. பிறகு வேற வழிமுறைகளை கையாளுவான். அல்லாஹ்வின் அடியார்கள் தொழுகைக்கு வரும் போது தொழுகையை முறியடிப்பதற்காக சில வழிமுறைகளை கடைபிடிப்பான். அடியார்கள் தொழுகைக்காக தக்பீர் கட்டும் போது பல சிந்தனைகளை நினைவு படுத்துவான்.
தொழுகையில் நிற்கும் போது இவரிடத்தில் இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தேன். அதற்குறிய வட்டியை அவன் தருவானா இல்லையா என்று நினைத்து பார்ப்பான். ஆனால் தொழுகையில் கவனத்தை செலுத்தாமல் விட்டுவிடுகிறான். அல்லது நம்முடைய கடையில் வியாபாரம் என்ன ஆகுமே என்று நினைத்து பார்ப்பான். இப்படி பல சிந்தனைகளை ஏற்படுத்தி நம்முடைய தொழுகையை வீணாக்க முயற்சி செய்வான். இப்படிப்பட்ட சிந்தனை நமக்கு வரும் போது உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான்.
இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, “இதை இதையெல்லாம் நினைத்துப்பார்” எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.’’
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி-1231
தொழுகையின் நடுவில் குறுக்கிடுதல்
தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் பல சிந்தனைகளை ஏற்படுத்தும் போது அதனை நாம் முறியடித்தால் ஷைத்தானின் முயற்சி வீணாகி விடுகிறது. இந்த விஷயத்திலும் அவன் தோல்வியடையும் போது வேற வழிமுறைகளை கையாளுவான். நாம் தொழுகும் போது சிலர் குறுக்கே செல்வதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாக்க முயற்சி செய்வான். குறுக்கே செல்லும் போது அவன் செல்ல விடாமல் அவர்களை தடுக்க வேண்டும், இப்படி செய்யும் போது அவனுடைய முயற்சிகள் வீணாகி விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி-3274
கதீஜா நவாஸ்
சவுதிஅரேபியா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments