
பாடல் - 29.
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.
விளக்கம்:
ஒரு மரத்தில் கனிகள் இருந்தால், யாரும் கூவிக் கூவி அழைக்காமலேயே, வௌவால்கள் கனிகளைத் தேடி வந்து விடும். பசுக்கள் தங்களது கன்றுகளுக்கும், பால் கறப்பவர்களுக்கும் தங்களிடம் சுரக்கின்ற பாலை வழங்கும்.
அது போல் தான், யாரும் கேட்காமலேயே இல்லை என்று சொல்லாமல், வாரி வழங்கும் வள்ளல்களுக்கு எல்லோரும் உற்றார் உறவினராகி விடுவார்கள்.
பாடல் - 30.
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.
விளக்கம்:
முந்தைய பிறப்பில் நாம் செய்த நல் வினை, தீய வினை களின் பயன்களை நாமே தான் அனுபவிக்க வேண்டும். அது போல் நம்மை யாராவது துன்பப் படுத்தினால் அது நாம் முன்னர் செய்த தீவினையின் பின் வினை என்று நினைத்து, பதிலுக்கு அவர்களுக்கு எந்த துன்பமும் செய்யக் கூடாது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments