
சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் ஒரு பதிவு, இந்தியா முழுவதும் பலரிடையே பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பெற்ற நல்ல வேலையை விட்டுவிட்டு, ஒருவர் தன்னுடைய விருப்பத்தின்பேரில் உணவு டெலிவரி ரைடராக மாறியிருக்கிறார். நிதிப் பிரச்சனை காரணமாக அல்ல, மாறாக கிளவுட் கிச்சன் தொடங்குவதற்கான “சந்தை ஆய்வு” செய்யவே இந்த அசாதாரண முடிவை எடுத்ததாக அவரது நண்பர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவின்படி, அந்த இளைஞர் ஸ்விகி, ரேபிடோ போன்ற நிறுவனங்களுடன் குறுகிய கால ஒப்பந்தங்களைச் செய்து, நுகர்வோரின் உணவுப் பழக்கங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஒரு பிரபல பல்கலைக்கழக மையத்துக்கு அருகில் டெலிவரி ரைடராக பணிபுரிந்த அவர், அப்பகுதி மக்களின் உணவு ஆர்டர் செய்யும் முறைகளையும், அதிகம் விற்பனையாகும் பொருட்களையும் கவனமாக பதிவு செய்து வந்தார். இதன் அடிப்படையில், 12 முக்கிய தயாரிப்புகளை (SKU) மலிவான விலையில் அதிக அளவில் விற்பனை செய்யக்கூடிய ஒரு மாடலை உருவாக்கி, 3-4 மாதங்களில் லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.
ஆனால், இந்த முடிவு அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. “அவரது பெற்றோர் என்னை அழைத்து, உண்மையாகவே அழுதார்கள்” என்று அந்த எக்ஸ் யூசர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தனது நண்பரின் வரவிருக்கும் திருமணம் மற்றும் நிதிப் பொறுப்புகள் குறித்து குடும்பத்தினர் கவலைப்பட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெலிவரி வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவர் எதிர்கொண்ட சிரமங்களும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் பயன்படுத்தியதற்கே, கட்டிட ஊழியர்கள் அவரை “கீழ்தரமான மனிதரைப் போல” கண்டித்ததாகவும் நண்பர் கூறுகிறார். “அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவர் தனது இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். நான் அவரை 100% ஆதரிக்கிறேன்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உங்கள் அனைவரின் உற்சாகமான வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்தது. ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த நான், ரிஸ்க் எடுக்க முடியும். ஆனால், மற்றவர்களிடம் இதை செய்ய சொல்ல மாட்டேன். நீங்கள் எனக்கு காட்டிய ஆதரவுக்கு நன்றி. நீங்கள் ஏமாறாதபடி நான் உழைப்பேன், வெற்றி பெறுவேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்த அசாதாரண முயற்சி, இந்தியாவில் வளர்ந்துவரும் டெலிவரி பொருளாதாரத்தின் யதார்த்தங்களையும், தொழில்முனைவோர் தங்கள் யோசனைகளை சோதிக்க எந்த அளவுக்கு துணிச்சலாக முடிவெடுக்கின்றனர் என்பதையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments