Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-6


கள்ளுண்ணாமை

குறள் மொழி 27

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

குறள் எண் : 925

குறள் மொழியின் பொருள் :

தன்னுடைய உடம்பையும், அறிவையும் கெடுக்கும் மதுவை வாங்கிக் குடிப்பது என்பது ஒழுக்கமற்ற 

மூடத்தனமான அறியாமை ஆகும். மது அருந்துவது விலக்கப்பட வேண்டிய ஒழுக்கமற்ற அறியாமையாகும்.

நபிமொழி

போதை தரும் அனைத்தும் ஹராம்! விலக்கப் பட்டவையே ஆகும். போதை தரும் பொருள் 

எதுவாயினும் அவை ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதே ஆகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(ஆதாரம், நூல்-முஸ்லிம் 4067)

இல்வாழ்க்கை

குறள் மொழி 28

28.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஓய்ப் பெறுவது எவன்.

குறள் எண் : 46

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் அறவழியில் நின்று அறப்பணி ஆற்ற இல்வாழ்க்கையில் இல்லறத்தில் இருந்தே 

செய்யலாம். அறம் போற்ற வேறுவழியோ அல்லது துறவறமோ செல்வதால் பெறுகின்ற பயன் 

எதுவும் இல்லை.

நபிமொழி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துறவறத்தை மேற்கொள்ளும்படிஉலகின் போதிக்கவே இல்லை. 

அவர், “இவ்வுலகில் குடும்பத்தில் இருந்து வாழுங்கள். பொருள்களை உபயோகியுங்கள். 

இறைவனைத் தொழுவதை, வணங்குவதை மட்டும் மறந்து விடாதீர்கள்”என்றே போதித்தார்கள்.

பண்டித் கோபால் கிருஷ்ணன் பி.ஏ., பாரதி சமாசார் (இந்தி)

நூல் ஆதாரம்: மாமனிதர் நபிகள் நாயகம் பற்றி மாமேதைகள்- பக்.51

(தொடரும்)

 


Post a Comment

0 Comments