(வெள்ளத்தில் பிறந்த காதலின் சோக முடிவு)

இலங்கையின் ஒரு சிறிய கிராமம்.மழை மூன்று நாட்களாகக் குறையவில்லை.
ஆறுகள் பெருக்கெடுத்து,வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கத் தொடங்கின.
அந்த கிராமத்தைச் சேர்ந்தவன் ரிம்ஷான்.அமைதியான, நல்ல மனசுக்கார இளைஞன்.
அவன் வீட்டிற்கு அருகே இருந்தது ரிசானாவின் வீடு.
அழகாக சிரிப்பாள்,அதுவும் ரிம்ஷான் பார்த்தால் மேலும் மென்மையாகும்.
இருவரும் ஒருவரை ஒருவர் நண்பர்களாகப் பேசுவார்கள்.
ஆனால்… காதல் என்று சொன்னது மட்டுமே சொல்லப்படாமல் இதயத்திலேயே பதுக்கி வைத்திருந்தார்கள்.
மழை திடீரென மோசமாக ஆரம்பித்தது.நீர்மட்டம் உயர்ந்து மக்கள் எல்லோரும் வெளியேறத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் ரிசானாவின் வீட்டுக்குள் நீர் வேகமாக புகுந்தது.
“ரிசானா! வெளியில் வா! நீர் ரொம்ப உயருது!”,என்று ரிம்ஷான் ஓடிவந்தான்.
ரிசானாவின் குரல் நடுங்கியது.
“முடியல ரிம்ஷான்… உம்மா இருக்கிறாங்க…நாங்கள் வெளியே வர முடியல…”
ஒரு நொடி கூட யோசிக்காமல் ரிம்ஷான் உள்ளே பாய்ந்தான்.
அவன் ரிசானாவின் தாயை முதலில் தூக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்தான்.
பிறகு இருவரும் சேர்ந்து தண்ணீரில் நடந்து வெளியே போவதற்கு முயற்சி செய்தார்கள்.
ஆனால் நீரின் வேகம் இருவரின் கால்களையும் அசைத்தது.
அந்த நேரத்தில் தண்ணீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ரிசானாவின் கை விடுபட சறுக்கிக் கீழே போனாள்.
“ரிம்ஷான்… கையை விடாதே…!”அவளின் குரல் கண்ணீரில் நனைந்தது.
ரிம்ஷான் அவளைப் பிடிக்க முயற்சி செய்தான்.ஆனால் நீர் இருவரையும் வெவ்வேறு திசைக்கு தள்ளியது.
“ரிம்ஷான்… பயமாயிருக்கு …”ரிசானாவின் குரல் நீரில் கலந்தது.
“நான் இருக்கேன் ரிசானா…உன்னை நான் ஒருபோதும் விட மாட்டேன்…”என்ற அவன் குரல் தொலைவாக மறைந்தது.
கடைசியாக அவள் நீரில் மூழ்கும் தருணம் அவளின் கைகள் தலையில் இருந்த ஹிஜாபை பிடித்ததை கண்டான் ரிம்ஷான்.
அடுத்த நாள்
வெள்ளம் சற்று குறைந்தபோது மக்கள் தேடத் தொடங்கினர்.
ஊரெங்கும் அழுகுரல்கள் கேட்டவண்ணம் இருந்தது.பச்சைப் பசேல் என்று காட்சியளித்த அந்த ஊர் சேரும் சகதியுமாக காட்சி அளித்தது.வீடுகள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக உடல்கள் சிதறிக்கிடந்தன.
தப்பியவர்கள் மண்ணுக்குள் புதையுண்ட இடங்களை தோண்டினார்கள்.
அரசு மீட்புக்குளுவினரும் உதவிக்கு வந்தார்கள்.
சேற்றில் புதைந்த உடல்களை ஒவ்வொன்றாக மீட்டெடுத்தனர்.
அதில் அவர்கள் கண்டது.ரிசானாவின் உடளும்..
அவள் கட்டியிருந்த ஹிஜாப் அப்படியே இருந்தது.அவள் முகத்தில் இனிமையான சிரிப்பு…
“நான் இருக்கேன் ரிசானா…உன்னை நான் ஒருபோதும் விட மாட்டேன்…”என்ற ரிம்சானின் கடைசி வார்த்தைகளை நினைத்தபடிச் சிரித்ததுபோல்.
ரிம்ஷானோ.....
பித்துப் பிடித்தவனாக அலைந்து கொண்டிருந்தான்
ஒரு வாரம் கடந்த பிறகும் கண்முன்னே பறிபோன ரிசானாவை அவனால் மறக்க முடியவில்லை. .
ரிசானாவின் தாய் கையில் இருந்த ஒரு பொருளை கண்ணீருடன் பிடித்துக்கொண்டிருந்தார்.
அது ரிம்ஷான் இரண்டு நாட்களுக்கு முன்பு ரிசானாவுக்கு கொடுத்த சிறிய தாமரைப்பூ .
"எதுக்குடி இந்தப்பூ " என்று உம்மா கேட்டபோது
"ரிம்ஷான் கொடுத்தது"என்று சிரித்துகொண்டே அவள் சொன்னது அந்தத் தாயின் உள்ளத்தை உருக்கியது.
அந்தக் கடும் வெள்ளத்திலும் அந்த தாமரைப்பூ தப்பியிருந்தது.
அது அவர்களின் சொல்லப்படாத காதலின் ஒரே நினைவாக இருந்தது.
அந்த கிராமத்துக்கு மக்கள் மீண்டும் வந்தபோதெல்லாம் ஆற்றங்கரையில் ஒரு கல்லை பார்த்தார்கள்.அதில் எழுதப்பட்டிருந்தது
“ரிசானா…நீரில் நீ போனாலும்…என் காதல் இன்னும் இங்கேயே இருக்கின்றது…”
யாரும் அந்தக் கல்லை வைத்தவர் யார் என அறியவில்லை.
ஆனால் கிராம மக்கள் சொல்லுவார்கள்.
“இரவு ஆறு ஓடும் சத்தத்துல,ரிம்ஷான் ரிசானாவை அழைத்துக்கிட்டே இருப்பானாம்…”
அந்த கதையைக் கேட்கும் ஒவ்வொருவரும் நெஞ்சில் ஒரு அமைதியான சோகத்தை உணர்வார்கள்.
யாவும் கற்பனையே

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments