Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-8


சொல் வன்மை

குறள் மொழி 31

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

குறள் எண்:642

குறள் மொழியின் பொருள்:

நன்மையும், தீமையும் நாம் பேசும் வார்த்தைகளால், உண்டாவதால் பேசும் போது பிறர் மனத்தை இரணமாக்காமல் வார்தைகளில் தவறேதும் வராமல் பேசுதல் வேண்டும். 

நபிமொழி

நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்; ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்; இறை நம்பிக்கை கொண்ட பின்னர் மோசமான வார்த்தைகள் பேசுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.

இறைவசனம், திருக் குர்ஆன் - 49:11.

வலியறிதல்

குறள் மொழி:32

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

குறள் எண்:474

குறள் மொழியின் பொருள்:

மற்றவர்களுடன் இணைந்து ஒத்துப் போகாமல், தன்னிடம் உள்ள ஆற்றலையும், தன்னிலையும் உணராமல், தன்னைப் பெரிதாகப் பாராட்டி தற்பெருமை கொண்டிருப்பவன் விரைவில் கெட்டுப் போவான்.

நபிமொழி

யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார். தற்பெருமை என்றும் இழிவைத் தரும்.
அண்ணல் நபி(ஸல்),நூல்:முஸ்லிம்–147
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(தொடரும்)


 


Post a Comment

0 Comments