Ticker

6/recent/ticker-posts

உள்ளத்திலே...!


பார்த்துப் பார்த்து
கண்கள் பார்த்து.
சேர்த்துச் சேர்த்து 
கவிதையைச் சேர்த்து
கோர்த்துக் கோர்த்து 
இசையைக் கோர்த்து
பாட வந்தேன்
பாடலொன்று
உன்னைக் கண்டு  

வேர்த்து வேர்த்து
தேகம் வேர்த்து 
வெட்கம் கண்டேன் 
உன் பக்கம் வந்து .
பழகிப் பழகிப் 
பார்த்துப் பழகி
பாதை வகுத்தேன் 
பாவையே என் 
காதலுக்கின்று 

கனியைப் போலே 
சுவைத்துப் பார்க்க
கணிசமான ஆசை 
கன்னியே உன்
சிவந்த இதழ் மேலே
கலந்து பேசி 
இணைந்து வாழா
கடலைப் போலே ஆசை 
உள்ளத்திலே 

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

0 Comments