Ticker

6/recent/ticker-posts

வடக்கு இஸ்ரேலில் அரங்கேறிய அடுத்தடுத்த தாக்குதல்களில் இருவர் பலி


இதனை ஒரு "தொடர் பயங்கரவாதத் தாக்குதல்" என்று இஸ்ரேலியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முதலில் பெய்ட் ஷீயன் (Beit Shean) நகரில் காரினால் மோதப்பட்டதில் 68 வயது முதியவர் உயிரிழந்தார்.

அங்கிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள ஐன் ஹரோட் (Ein Harod) பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவரைத் தாக்குதல்காரர் கத்தியால் குத்திக் கொன்றார்.

இறுதியில் அபுலா (Afula) நகருக்கு வெளியே ஒரு பொதுமக்களால் தாக்குதல்காரர் சுடப்பட்டு காயமடைந்தார்.

தாக்குதல் நடத்தியவர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் வடக்குப்பகுதியில் உள்ள கபாடியா (Qabatiya) கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபர் என்றும், அவர் இஸ்ரேலில் சட்டவிரோதமாக பணிபுரிந்து வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கபாடியா பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தயாராகி வருகிறது. "மிகவும் வலுவாகவும் உடனடியாகவும்" பதிலடி கொடுக்க பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பதற்றமான சூழலுக்கு முன்னதாக, மேற்குக்கரையில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாலஸ்தீனியர் ஒருவர் மீது குவாட் மோட்டார் சைக்கிள் (Quad bike) ஏற்றிய இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு இடையே வன்முறை அதிகரித்துள்ள நிலையில், மேற்குக்கரையில் இஸ்ரேலியக் குடியேறிகளின் தாக்குதல்களும், பாலஸ்தீனியர்களின் இத்தகைய அதிரடித் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

tamilwin

 


Post a Comment

0 Comments