Ticker

6/recent/ticker-posts

மீன் காட்சியகத்தில் புகைபிடித்த ஆடவர் - சீறியது திமிங்கலம்


மீன் காட்சியகத்தில் புகைபிடித்த ஆடவருக்கு எதிராகத் திமிங்கலம் சீறி எழுந்திருக்கிறது.

அங்கு புகைபிடிக்கக்கூடாது என்ற விதியைப் பொருட்படுத்தாமல் ஆடவர் மீன்குளத்துக்கு அருகே சிகரட் பிடித்தார்.

பெண் ஊழியர் அவரைத் தடுக்க முயன்றபோதும் ஆடவர் பிடிவாதம் பிடித்தார்.

அப்போது பெலுகா திமிங்கலம் ஒன்று குளத்திலிருந்து எழுந்து, நீரைக் கக்கி, சிகரட்டை அணைத்தது.

ஆடவர் முற்றிலுமாக நனைந்து நின்றார்.

சீனாவில் சம்பவம் நடந்தது.

அந்த நிகழ்வைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவுகிறது.

அது சிலரைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது; சிலரை நிறைவடையச் செய்தது.

இணையவாசிகள் பலரும் திமிங்கலத்தைப் பாராட்டினர்.

திமிங்கலத்திற்குத் தெரிவதுகூட மனிதருக்குத் தெரியவில்லையே என்று வேதனை அடைந்தனர் சிலர்.எனினும் அந்தக் காணோளி உண்மையா போலியா என்று சிலர் சந்தேகம் கொண்டனர்.

மீன் காட்சியகம் அது குறித்து விளக்கம் தரவில்லை.

seithi

 


Post a Comment

0 Comments