Ticker

6/recent/ticker-posts

டித்வா' சூறாவளியால் இந்தியா பாதிப்படைந்ததா?


முழு இலங்கையையும் புரட்டிப் போட்ட, தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி, குறைந்த அழுத்த மண்டலத்திலிருந்து வளர்ச்சியடைந்த டித்வா சூறாவளி,  இலங்கையின் வடக்கு-கிழக்கு கரையோரத்தைத் தொட்டு, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி வடமேற்குத் திசையில் அமைதியாக நகர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 3-4 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடற்கரைகளைக் கடக்குமுன் ஓர் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவாகி, பின்னர் அது  குறைந்த காற்றழுத்தமாகப் பலவீனமடைந்துள்ளது!

தென்னிந்தியாவில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் இந்த சூறாவளி அமைப்பு கணிசமாகப் பலவீனமடைந்தது.

இருப்பினும், அதன் தாக்கம் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தது. மழைப்பொழிவு சிதறி, அதன் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து  நான்கு நாட்களாக மூடப்பட்டன.

சென்னையின் தாழ்வான பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறாகலாயின. வயல் நிலங்கள் சில பாதிப்படைந்ததோடு, மூவர் மரணமடைந்துள்ளனர்.

சூறாவளி தென்னிந்தியாவை நோக்கி நகருமுன் இலங்கையில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, சுமார் 600 பேர்கள் உயிரிழந்தனர்; ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி பாதிப்படைந்தது.

இலங்கைக்கு உதவ இந்தியா, "ஆபரேஷன் சாகர் பந்து"வைத் தொடங்கியது. மருத்துவ உதவி, உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்திய விமானப்படை மற்றும் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்திய அரசு அனுப்பி வைத்தது.

தென்னிந்தியாவில் மழை பெய்தாலும், வட இந்தியாவில் முற்றிலும் மாறுபட்ட வானிலை நிலவுகிறது.

டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் வெப்பநிலை குறைந்து, கடுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது.
சூறாவளி அச்சுறுத்தல் நீங்கிவிட்டபோதிலும், இப்போது தமிழ்நாட்டில் வெள்ளத்தை நிர்வகிப்பதிலும், அண்டை நாடான இலங்கையின் நெருக்கடிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்தி வருவதுவும் குறிப்பிடத்தக்கது.

செம்மைத்துளியான்.

 


Post a Comment

0 Comments