
குமரன் அருகே பெற்றோரையும் அமர்ந்திடச் செய்தார்கள்.
சற்றுத் தொலைவில் இருந்த சரவணன் குமரனின் பெற்றோரைப் பார்த்து வணக்கம் வைத்தான்.அவர்களும் புன்னகையால் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அதனைப் பார்த்த மூத்த மருத்துவர்
"சரவணா உமக்கு வேறு வேலை இல்லையா சும்மா யாரைப் பார்த்தாலும் கும்பிடு போட்டுக்கிட்டு இருக்காயே.இவர்கள் என்ன பெரிய இடத்துப் படையா? பண்ணாடைகள் பார்த்தாலே தெரிகிறதே.தறியடிக்கும் கூட்டம் போல் இருக்கு இருவரும் கைத்தறி வேட்டி சேலையோடு தானே வந்திருக்கார்கள்.பிச்சைக்காரக் கூட்டம்.இவர்களைப் போய் அரண்மனைக் காவலர்களோடு அழைப்பு விடுத்திருக்கின்றார்களே. இளவரசியார் எல்லாம் அவர் தன் மகள் ராஜகுமாரி மேல் வைத்திருக்கும் பாசம் படுத்தும் பாடு.
எனக்கு ஒன்று மட்டும் புரியளடா சரவணா இந்தக் குடும்பம் எப்படிடா சிலவு செய்து இவனைப் படிப்பித்து இருக்கும் ஒரு வேளை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பாவப் பட்டு பணம் கொடுத்தார்களோ?" என்று கூறி சரவணன் தோளில் தட்டிச் சிரித்தார்.
சரவணனுக்கு பொங்கியது கோபம்.
'ஒன்றும் பண்ண முடியாதே சீ என்ன மனிதர் இவர் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்.போல் இருக்கிறதே.நாம் வேறு இடம் மாறி அமரலாம் என்றால் அவையும் முடியாதே எல்லாம் என் தலை எழுத்து இவருக்குக்கிட்ட மாட்டி முழிக்கிறேன்'. என்று தனக்குள்ளே பேசிக் கொண்டான்.
அவரே அவன் சிந்தனையைக் களைத்தார்
"என்ன நான் பேசித்தே இருக்கிறேன். நீ பதிலே கூறாமல் இருக்காய்." என்றார்.
"இல்லை ஐயா நானும் அவர்களையே பற்றி சிந்தித்தேன் ஒரு வேளை நீங்க கூறுவது போல் குமரன் ஏழை தானோ?"என்று தான் வேறு எவையும் இல்லை எனக் கூறி புன்னகைத்தான்.மனதிலே நச்சரித்த படியே.
அந்த நேரம் பார்த்து ஒரு காவலன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றான்.
"அரசே ஓர் கிராமமே திரண்டு வருவது போல் தென்படுகிறது" என்றான்.
அதற்கு மந்திரி கூறினார்
"விருந்துக்காக சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களையும் தானே அழைத்தோம்.அவர்களாகவே இருக்கும்.இதில் ஆச்சரியப் படவோ அதிர்ச்சி அடையவோ என்ன இருக்கு" என்று கேட்டார் காவலாளரைப் பார்த்து.
அதற்கு அந்தக் காவலன் "மன்னிக்க மந்திரி அவர்களே,தாங்கள் கூறுவது போல் இவர்கள் விருந்துக்கு வருவதாகத் தெரியவில்லை. ஏன் என்றால் வந்துகொண்டு இருப்போர் அனைவரும் மருத்துவர் குமரனின் ஊர் மக்கள்" அரசே என்றான்.
"என்ன அது என் ஊர் மக்களா?."என ஆச்சரியத்தோடு வினா தொடுத்தவாறே குமரனின் தந்தை எழுந்தார்.
அவரைத் தொடர்ந்து குமரனும் தாயாரும் எழுந்தார்கள்.
ஏன்? அவர்கள் இங்கே வந்தார்கள்.ஏதேனும் தெரியுமா தாங்கள் அறிவீர்களா?." என ராணி குமரனின் தந்தையிடம் கேட்டார்.
"இல்லை அரசே எனக்கும் ஒன்றும் புரியவில்லை" எனப் பதில் கொடுத்தார் குமரனின் தந்தை.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments