
தேநீர் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சளி இருமலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் 3 மூலிகை டீ வகைகளை இதில் காண்போம்.
முசுமுசுக்கை தேநீர்
தேவையான பொருட்கள்:
முசுமுசுக்கை இலைகள் -ஒரு கைப்பிடி
காய்ச்சிய பால் -100 மில்லி
தேன்- ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள்- சிறிதளவு
செய்முறை:
முசு முசுக்கை இலைகளை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். அதனுடன் 100 மில்லி காய்ச்சிய பால், ஒரு தேக்கரண்டி தேன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து அருந்தவும்.
சளி, இருமல், அலர்ஜிக், மூச்சுத் திணறல், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும்.
வல்லாரை தேநீர்
தேவையான பொருட்கள்:
வல்லாரை இலைகள்- ஒரு கைப்பிடி
பனைவெல்லம் -தேவையான அளவு
தேன் -சிறிதளவு
காய்ச்சிய பால் -100மில்லி
ஏலக்காய் பொடி-2சிட்டிகை
செய்முறை:
வல்லாரை இலைகளை சுத்தம் செய்து, ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும். வடிகட்டியவற்றுடன் ஏலப்பொடி, காய்ச்சிய பால், பனைவெல்லம், சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி தேனும் கலந்து பருகவும்.
மூளைத்திறனை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். மறதி நோய் வராமல் தடுக்கும். சர்க்கரை வியாதிக்காரர்களின் நரம்புத் தளர்ச்சி நோயை குணமாக்கும். அதிகளவு இரத்த சர்க்கரையை சமநிலைக்கு கொண்டுவரும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை சரி செய்யும்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments