
டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும் ஒரு கோடி ரூபா நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காணி கொள்வனவு மற்றும், வீடமைப்பு பணிகளைக் குறித்த பயனாளர் முன்னெடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் தொடர்பான இற்றைப்படுத்தப்படும் தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பயனாளி தனக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments