
சீரக தண்ணீர் மற்றும் சியா விதைகள் இடையே எது மிகவும் நல்லது? இரண்டிலும் என்ன ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன என்பது பற்றி பார்க்கலாம்...
உடல் எடையை எப்படி இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிமையான உணவுமுறை மாற்றத்தின் மூலம் குறைப்பது என்ற தேடல், காலம் காலமாக நம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும். உண்மையாகவே அன்றாட வாழ்வியலில் நாம் செய்துகொள்ளும் எளிமையான சில சின்ன சின்ன உணவு மாற்றங்கள்கூட, நம் எடையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
இப்படியான ஒரு எளிமையான மாற்றம்தான், சீரக நீர் மற்றும் சியா விதைகள் ஊறவைக்கப்பட்ட நீர். இவை இரண்டும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டிருப்பதால், வளர்சிதை மாற்றங்களை ஊக்கப்படுத்தவும் செரிமானத்தை மேம்படுத்தவும் அதிகம் உதவுகின்றன.
ஆனால் இந்த இரண்டிலேயே எது மிகவும் நல்லது? இரண்டிலும் என்ன ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன? இதுபற்றி பார்க்கலாம்...
சீரகம், ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. செரிமானத்தை தூண்டிவிடும் தன்மை இருப்பதாலும், கலோரி குறைவாக இருப்பதாலும் இது உடல் எடை குறைய உதவுகிறது.
இதுவே சியா விதைகளானது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, செடியிலுள்ள புரதம் போன்றவை அதிகம் இருக்கின்றன. மேலும் கால்சியம், மெக்னீஷியம், ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸும் இதில் உள்ளது என்பதால் எடை குறைப்பிற்கு உதவுகின்றன.
இவை இரண்டில் சீரக தண்ணீரானது உடலின் ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் தன்மை கொண்டது. அதுவே சியா விதைகள், ஊறவைக்கப்படும்போது, விரிவடையும் தன்மை கொண்டது என்பதால், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் ஸ்நாக்ஸ் கிரேவிங்ஸ் எடுப்பது தடுக்கப்படும். ஆகவே துரித உணவுகள் உண்பது தடுக்கப்பட்டு, பசியும் கட்டுப்படுத்தப்படும்.
சீரகத்தண்ணீரை காலையில் வெறும் வயிற்றிலும், சியா விதைகள் ஊறவைக்கப்பட்ட நீரை பிற்பகலில் உணவுக்கு இடையேவும் குடித்து வருவது நல்ல பலன்களை தரும்.
சரி, இரண்டில் அதிக நன்மைகளை கொடுக்கும் என்ற கேள்விக்கு வருவோம். இது உங்களின் தேவை என்ன என்பதை பொறுத்தே அமையும். உதாரணமாக திருப்திக்கரமான உணர்வு வேண்டும், உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்பவர்களுக்கு சியா விதைகள் ஊறவைக்கப்பட்ட நீரே நல்லது. அதுவே செரிமானம் மேம்பட வேண்டும், வளர்சிதை மாற்றங்கள் வேண்டும் என்பவர்களுக்கு சீரகத்தண்ணீர் நல்லது.
உடல் எடையை குறைக்க வேண்டும், அதற்கு எது சிறந்தது என்பவர்கள், இரண்டு நீரையும் வெவ்வேறு நேரத்தில் அன்றாடம் குடித்து வருவது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments