Ticker

6/recent/ticker-posts

100 வயசு வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இன்றிலிருந்து இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!


100 வயது வரை நீங்கள் ஆரோக்கியமாக வாழ, என்ன செய்ய வேண்டும் என்ற சீக்ரெட் டிப்ஸை இங்கே பார்க்கலாம்.

புத்தாண்டு பிறந்துள்ள இந்த நேரத்தில், ‘இந்த வருஷம் என்ன ஆனாலும் ஆரோக்கியமா வாழணும்’ என ரெஸால்யூஷன் எடுத்துள்ளீர்களா நீங்கள்? அப்போ உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. 100 வயது வரை நீங்கள் ஆரோக்கியமாக வாழ, என்ன செய்ய வேண்டும் என்ற சீக்ரெட் டிப்ஸை இங்கே பார்க்கலாம்.

சென்னையை சேர்ந்த பிரபல இதய மருத்துவர் சொக்கலிங்கம், தன்னுடைய ஒரு பேட்டியில் இதற்கான டிப்ஸை கூறியிருக்கிறார். அசத்தலான அந்த டிப்ஸை, இன்றிலிருந்தேகூட நீங்கள் பின்பற்றலாம்.

“நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, இரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்தால்கூட போதும். இண்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்று இது சொல்லப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது” என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.

சரி, இருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த இரு வேளை என்பது எது? காலை, மதியமா? மதியம், இரவா? அதற்கும் மருத்துவரே விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி “இரவு 7 மணி டின்னரை முடித்துக் கொள்கின்றீர்கள் என்றால், அதிலிருந்து 16 மணி நேரம் கழித்து, அதாவது மறுதினம் காலை 11 மணிக்கு சாப்பிடுங்கள்” என்றுள்ளார் மருத்துவர்.

காலை 11 மணிக்கு சாப்பிட்ட பின் 8 மணி நேரம் கழித்து இரவு 7 மணிக்கு சாப்பிடுவது; பின் 16 மணி நேரம் கழித்து மறுதினம் காலை 11 மணிக்கு சாப்பிடுவது என்ற இந்த 16:8 இடைவெளியிலான உணவுமுறையை பின்பற்றினால் 100 வயதுவரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்கிறார் மருத்துவர். இது எப்படி பலனளிக்கிறது? 16 மணி நேரம் வயிறை காலியாக வைக்கும்போது, உடலிலுள்ள கொலஸ்ட்ரால் நன்கு உட்கரிக்கப்பட்டு, கரைந்து உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். அசிடிட்டி, அமிலப் பிரச்சனைகளை போன்றவற்றை தடுக்கும். இதய ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

இத்துடன் “தினமும் 3 லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும். போலவே உணவில் எண்ணெய்யை குறைத்து ஆயுளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்காகவும் சோர்வடைந்துவிடாமல், அன்றாடம் உடற்பயிற்சியும் உடலசைவும் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் படுக்கைக்கு சென்றவுடன் 2 நிமிடங்களில் தூக்கம் கிடைக்கும். 7 – 8 மணி நேரம் அன்றாடம் தூங்க வேண்டும்” என்கிறார் மருத்துவர்.

போலவே, “உணவில் கவனமாக இருப்பது போலவே, மனநலனிலும் அக்கறை வேண்டும். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களான டோபமைன், ஆக்ஸிடோசின், செரடோனின், எண்டாக்சின், மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் நன்கு சுரக்கும்போது உடல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கும். அன்றாடம் தியானம் செய்வது, மிக மிக நல்லது. இப்பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், உடலிலும் மனதிலும் பாரமின்றி ஒருவரால் வாழ முடியும். இதன்மூலம் நம்மால் 100 வருடம் ஆரோக்கியமாக வாழ முடியும்” என்பது மருத்துவரின் கூற்றாக உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்

news18

 


Post a Comment

0 Comments