Ticker

6/recent/ticker-posts

கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் வளைகுடா வள்ளல் குவைத் தொழில் அதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி அவர்களுக்கு பெருமானார் ஸல்(1500)சமூக நீதி விருது!


தென்னிந்தியப்  பத்திரிக்கையாளர் சங்கம்,  திருக்குறள் ஆய்வுக் கழகம், மற்றும் நூர் சேட் மெட்ரிக் மேனிலைப்பள்ளி (இணைந்து நடத்திய விழா)

தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் சங்கம் 14 ஆவது ஆண்டு மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழக ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழா.

"டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமும் சமூக சிந்தனையும்" மற்றும் "குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்" (இரண்டாவது பதிப்பு) நூல்கள் வெளியீடு.

35 சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா. ஆகிய முப்பெரும் விழா 

05-01-2026 காலை : 10-00 மணிக்கு நூர் சேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர், கோயம்புத்தூரில் இனிதே நடைபெற்றது.

கடவுள் வாழ்த்து :
தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.முன்னதாக பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறள் ஆய்வுக் கழக நிறுவுனர் தலைவர் குறள்யோகி தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார்,

நூர்சேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் திருமதி ஆஷா மேரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தொடக்கவுரை இனிய தமிழகம் ஆசிரியர் திரு.இராஜேந்திர குமார் அவர்கள் நிகழ்த்தினார்,

டிவிஎஸ் ஹைதர் குரூப் ஆப் கம்பெனி - சேர்மன் (GCC Countries ) குவைத் தொழில் அதிபர் வளைகுடா வள்ளல் டாக்டர் எஸ்.எம்.ஹைதர்அலி அவர்கள் நூல்கள் வெளியிட்டு,தனக்கே உரிய பாணியில் சிறப்புரை ஆற்றி அனைவரையும் நெகிழச் செய்தார்.
கோவை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி முனைவர் இரா.அன்பரசி அவர்கள் நூல்களின் முதல் படிகள் பெற்றுக்கொண்டு நெகிழ்வுடன் பேருரை ஆற்றினார்.

தொடர்ந்து திரு.T.N.அப்துல் காதர் அவர்கள்,தாளாளர், நூர் சேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குனியமுத்தூர், கோவை. 
சமூக ஆர்வலர் திரு.டிஸ்கோ காஜா அவர்கள், கோவை.வாழ்த்துரை வழங்கினார்கள்.

*ஏ.பி.ஜே  அப்துல் கலாமும் சமூக சிந்தனயும்- நூல் குறித்து மேனாள் வேளாண் பல்கலைக்கழகத்தின் முனைவர் விஜயராகவன் அவர்கள் பேசினார்.

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள் நூலினை  எழுத்தாளர் அரங்க இல.வள்ளியப்பன் அவர்கள்,(துணைத் தலைவர்,உலகத் தமிழ் நெறிக் கழகம்,கோவை)அழகாக அறிமுகம் செய்து பேசினார்.

அதைத் தொடர்ந்து சமூக பங்களிப்பு செய்த35 சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு மற்றும்,1330 குறட்பாக்களை மனனம் செய்த சாதனைக் குழந்தைகள் செல்வன் திருக்குறள் அ.ச.சாணாக்கிய மித்ரன் (2 -ஆம் வகுப்பு)திருக்குறள் செல்வி ச.செல்வராணி(4 ஆம் வகுப்பு)சாதனைக் குழந்தைகளுக்குச் சிறப்பு செய்தல் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

நன்றியுரை : 
திரு.ஏ.ஜக்காரியா அவர்கள்,(நிர்வாக அறங்காவலர்,திருக்குர்ஆன் அறக்கட்டளை, கோவை)கூறினார்.

நிகழ்ச்சித் தொகுப்பினை தூய தமிழ்ப் பற்றாளர்,முனைவர் ஷர்மிளா பானு அவர்கள், (மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்,திருக்குறள் ஆய்வுக் கழகம், கோவை)மற்றும் பள்ளி ஆசிரியர் அஃல்பியா அவர்கள் சிறப்புடன் செய்து அவையை மகிழ்வித்தனர்.

நிறைவாக நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

விருந்து உணவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.


 


Post a Comment

0 Comments