
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணி ஏற்கனவே சூரியகுமார் யாதவின் தலைமையில் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வரும் ஜனவரி 3-ஆம் தேதி அல்லது 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது
இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது பேக்கப் விக்கெட் கீப்பராக இடம் பெறப்போகும் வீரர் யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டியினை பொருத்தவரை கே.எல் ராகுல் வழக்கம் போல முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம் பிடிப்பார்.
அவருக்கு அடுத்து பேக்அப் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற போகிறார்கள் என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் உள்ளது. அந்த வகையில் இந்திய ஒருநாள் அணியின் பேக்கப் விக்கெட் கீப்பருக்கு 3 பேர் காத்திருக்கின்றனர். குறிப்பாக இஷான் கிஷன் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து நிராகரிக்கப்பட்ட வேளையில் உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று மற்றொரு வீரராக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் வேளையில் ஒருநாள் போட்டியில் மீண்டும் அவருக்கு அழைப்பு வரலாம் என்று தெரிகிறது. ஆனாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக இல்லை என்பதனால் அவரை தேர்வு செய்ய நிர்வாகம் தயக்கம் காட்டும்.
அதே வேளையில் மற்றொரு இளம் வீரரான துருவ் ஜுரேல் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதுமட்டும் இன்றி டி20 போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டுள்ளார். எதிர்கால கிரிக்கெட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் ஒருநாள் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த மூவரில் யாரை இந்திய அணி சரியான தேர்வாக அணிக்குள் கொண்டு வரப்போகிறது என்பது எதிர்வரும் வாரத்தில் தெரியும்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments