
வெனிசுலாவின் எண்ணெய் வளம் என்பது அந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக மட்டுமல்லாமல், உலக அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாகவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 3,030 கோடி பேரல்கள் எண்ணெய் வெனசுலாவிடம் உள்ளது... இதன் சந்தை மதிப்பு சுமார் 17.3 ட்ரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 1,400 லட்சம் கோடி ரூபாய்...
மிகப்பெரிய வளத்தைக் கொண்டிருந்தாலும், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது... 1990-களில் ஒரு நாளைக்கு 35 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. மதுரோவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு மற்றும் அமெரிக்கத் தடைகளால், ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல்களுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில், உலக எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலாவின் பங்கு வெறும் 1% மட்டுமே...
அதிபர் டிரம்ப் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மீட்க "மறுசீரமைப்பு" திட்டத்தை அறிவித்துள்ளார். சிதைந்துள்ள உள்கட்டமைப்பைச் சரிசெய்ய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளன.. இந்த அறிவிப்பை தொடர்ந்து, வெனிசுலாவில் உள்ள செவ்ரான் (Chevron), ஹாலிபர்டன் (Halliburton), எக்ஸான் மோபில் (ExxonMobil) மற்றும் கொனோகோபிலிப்ஸ் (ConocoPhillips) நிறுவன பங்குகள் 11% வரை உயர்வை கண்டன.
ஜனவரி 8- ஆம் தேதி, அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிரிஸ் ரைட், முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அப்போது வெனிசுலாவில் முதலீடு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதில், செவ்ரான் ஏற்கனவே வெனிசுலாவில் சிறப்பு உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனமே, டிரம்பின் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..
வெனிசுலாவின் சிதைந்துள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைச் சீரமைக்க சுமார் 18 மாதங்கள் ஆகும் என்றும், இதற்குப் பல பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்களுக்கும் குறைவாக உள்ள உற்பத்தியை, அடுத்த 2 ஆண்டுகளில் ஒன்றரை மில்லியன் பேரல்களாக உயர்த்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..
வெனிசுலாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், அதற்குப் பதிலாக வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அனைத்தும் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதிக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் ரஷ்யாவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தை முடக்க அமெரிக்கா திட்டமிடுகிறது.
இந்தியாவின் ரிலையன்ஸ் மற்றும் ONGC நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன. அமெரிக்காவின் இந்த "மறுசீரமைப்பு" நடவடிக்கையால், இந்திய நிறுவனங்களும் தங்களின் பழைய பாக்கிகளை வசூலிக்கவும், மீண்டும் உற்பத்தியைத் தொடங்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ONGC நிறுவனத்தின் வெளிநாட்டுப் பிரிவான OVL, வெனிசுலாவில் உள்ள சான் கிறிஸ்டோபால் எண்ணெய் வயலில் 40% பங்குகளை வைத்துள்ளது.
வெனிசுலா அரசாங்கம், ONGC நிறுவனத்திற்கு, ஏறத்தாழ 8,300 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தத் தொகையை வெனிசுலா அரசு இந்தியாவுக்கு அனுப்ப முடியாமல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் வெனிசுலாவுடன் சுமார் 15 ஆண்டுகால கச்சா எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா வெனிசுலாவை நிர்வகிக்கத் தொடங்கியுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் இனி கச்சா எண்ணெயை பேரலுக்கு 5 முதல் 8 டாலர் வரை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இது ரிலையன்ஸின் லாபத்தை பல மடங்கு உயர்த்தும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments