Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீசைலம் கோயில் ஊழியர்களின் ஆபாச நடன வீடியோ வைரல்... 5 பேர் மீது வழக்குப்பதிவு...


கோயில் வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, திரைப்படப் பாடல்கள் மற்றும் ஐட்டம் பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் விதிகளை மீறியதாகவும், பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் ஊழியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாபு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீசைலம் கோயிலில் உள்ள மல்லிகார்ஜுன அன்னசத்திரம் கோயிலுடன் இணைக்கப்பட்ட ஒரு இலவச உணவு மையமாகும். இங்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று, சில அன்னசத்திர ஊழியர்கள் வளாகத்திற்குள் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடினர். இதனால் கோபமடைந்த கோயில் நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் புனிதமான கோயிலில் ஆபாச நடனம் ஆடியதாகவும், இது பக்தர்களின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் நிர்வாகத்தின் தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், புத்தாண்டு காலத்தில் ஊழியர்கள் விதிகள் மற்றும் கண்ணியத்தைப் புறக்கணித்தனர். இது பக்தர்களின் கோபத்திற்கு வழிவகுத்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா அன்னசத்திரக் கோயில் அதிகாரிகள் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் புனித யாத்திரை மையத்தின் வளாகத்திற்குள் ஆபாசமாக நடனங்களை ஆடினர். இது பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் புனித யாத்திரை மையத்தின் வளாகத்தில் அநாகரீகமான நடனங்களை ஆடினர், இது பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியது மட்டுமல்லாமல், பக்தர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, கோயில் வளாகத்திற்குள் நடனமாடிய ஊழியர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை பாதுகாப்பு அதிகாரி பாபு இந்த வழக்கை தாக்கல் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஊழியர்கள் மீது ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஏற்கனவே தங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

news18

 


Post a Comment

0 Comments