
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகின்றது. இலங்கையிலும் நடைபெற உள்ள அந்தப் தொடரில் இந்திய அணி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை கொழும்பு மைதானத்தில் விளையாட உள்ளது.
அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு செல்லும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கத்தில் இந்தியா சில டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது சில மாதங்களுக்கு முன் வீசிய டிட்வா புயல் இலங்கையை மிகப்பெரிய பாதிப்படையை வைத்தது. அந்தப் புயலால் மழைக் கொட்டி தீர்த்ததால் இலங்கையே வெள்ளக்காடாக காட்சியளித்தது என்று சொல்லலாம். அதன் காரணமாக ஏராளமான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்பை சந்தித்துள்ளார்கள். அதனால் இந்தியா, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகள் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைக்க இலங்கை வாரியம் தங்கள் அரசுக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு எதிராக சில டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை வாரியத்தின் தலைவர் ஷம்மி செல்வா தெரிவித்துள்ளார். அந்த பணம் இலங்கை அரசுக்கு நிவாரண நிதியாக கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்தத் தொடரை வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போது இந்திய அணியை வரவைத்து விளையாட வைப்பதில் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் தொடர் முடிந்ததும் டி20 போட்டிகளை நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கு பிசிசிஐ தயாராக இருப்பதாக தெரிவிக்கும் ஷம்மி இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நிதி திரட்டுவதற்காக டிசம்பர் மாதம் இலங்கைக்கு வந்து 2 டி20 போட்டிகளில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதை நடத்துவதற்கு எங்களுக்கு போதுமான நேரம் இல்லை. குறிப்பாக அதை ஒளிபரப்புவதற்கு ஒளிபரப்பாளர் இல்லை” என்று இலங்கை டெய்லிமிரர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைக்கு உதவி செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவதாக அமைகிறது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments