Ticker

6/recent/ticker-posts

காணொளி விளையாட்டில் சாதிக்கப் பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்


காணொளி விளையாட்டில் சாதிக்க ஆசை...

அதனால் பள்ளிப் படிப்பைக் கைவிட முடிவெடுத்த 12 வயது மாணவன்.

ஜப்பானைச் சேர்ந்த தாரோவின் (Tarou) முடிவைப் பெற்றோரும் ஆதரிப்பதாக South China Morning Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஓராண்டாகப் பெற்றோரிடமும் பள்ளியிடமும் கலந்துரையாடி அவ்வாறு முடிவெடுத்ததாகத் தாரோ கூறினார்.

"3 வயதிலிருந்தே காணொளி விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.

8 வயதிலேயே முழுநேரக் காணொளி விளையாட்டாளர்களை வீழ்த்தும் திறமை அவருக்கு இருந்தது," என்றனர் தாரோவின் பெற்றோர்.

2020வில் தாரோ சமூக வலைத்தளம் ஒன்றைத் தொடங்கினார்.

அதில் Fortnite காணொளி விளையாட்டை விளையாடும் காணொளிகளைப் பதிவிட்டார்.

இன்று அப்பக்கத்தை 230,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

காணொளி விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி செய்ய நாளுக்கு 13 முதல் 14 மணிநேரம் எடுக்கும். எனவே மகனின் முடிவுக்குப் பக்கபலமாக இருக்க விரும்பியதாகத் தாரோவின் தந்தை South China Morning Post செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.

"மகனின் திறமை மீது பெரும் நம்பிக்கை உள்ளது. அவர் நிச்சயமாகக் காணொளி விளையாட்டில் சாதிப்பார்," என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தாரோவின் கதை குறித்து இணையவாசிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

சிலர் பெற்றோர் மகன் மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பையும் அவரது கனவுக்குத் துணையாக நிற்பதும் மனம் நெகிழ வைக்கிறது என்றனர்.

வேறு சிலரோ பள்ளிப் படிப்பின்போது நண்பர்களோடு ஏற்படக்கூடிய இனிய அனுபவங்களைத் தாரோ இழக்க நேருமே என்று கவலை தெரிவித்தனர்.

seithi

 


Post a Comment

0 Comments