Ticker

6/recent/ticker-posts

நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுங்கள் முஸ்லிம் அமைப்புக்கள்: அமைச்சர் விஜிதவிடம் கோரிக்கை


முஸ்லிம்களின் புனித ஹஜ் விவகாரங்களை மேற்கொள்ளும் ஜித்தா கவுன்சூலர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் நடந்த சந்திப்பின்போது கோரிக்கையை முன் வைத்தனர்.

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக
ஒரு சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் அமைச்சர் விஜித ஹேரத்திற்கும்  இடையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராயப்படும்.

இம்முறை நடந்த கூட்டத்தில் ஜமியத்துல் உலமா பிரதிநிதிகள், முஸ்லீம் மீடியா போரம் உட்பட பல அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து புனித ஹஜ் யாத்திரையின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்காக தீர்வு பெற்றுக் கொள்ளும் வழி முறைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது புனித மக்கா நகரில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியின் அவசியம், சவுதி அரேபியாவின் சட்டங்கள், சம்மந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டு நியமிக்கப்படவிருக்கும் கொன்சுலர் சம்பந்தமாக மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பேருவளை ஹில்மி 


 


Post a Comment

0 Comments