
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணையச் சேவையைத் துண்டிக்கும் வகையில் "கில் ஸ்விட்ச்" களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில், பொருளாதார சுணக்கம் மற்றும் விலைவாரி உயர்வை கண்டித்து கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டங்களின் போது மக்களுக்கு போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில், இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு, இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகளை துண்டித்துள்ளது.
இதனை தொடரந்து கடந்த 9- ஆம் தேதி, முதல் இளைஞர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், தற்போது ஈரானிய ராணுவம் அந்தச் சேவையையும் 80 சதவிகிதம் வரை முடக்கியுள்ளது. அதாவது, கில் ஸ்விட்ச்" (Kill Switch) எனப்படும் அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தை துண்டித்துள்ளது...
இந்த "கில் ஸ்விட்ச்" தொழில்நுட்பம் ராணுவத் தரத்திலான ஜாமிங் கருவிகளைக் கொண்டு செயல்படுகிறது. ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணையம் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோளுக்கும், பூமியில் இருக்கும் 'டிஷ்' ஆண்டெனாவுக்கும் இடையே நடக்கும் ரேடியோ அலை பரிமாற்றம் ஆகும்.
கில் ஸ்விட்ச் தொழில்நுட்பம், ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் அதே அலைவரிசையில் மிக வலிமையான தேவையற்ற சிக்னல்களை வெளியிடும். ஸ்டார்லிங்க் கருவிகள் செயல்பட GPS சிக்னல் அவசியம். இந்த கில் ஸ்விட்ச் கருவிகள் அந்தப் பகுதியில் உள்ள GPS சிக்னல்களைச் சிதைத்து, கருவியை நிலைகுலையச் செய்யும். இதனால் இணையத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். குறிப்பாக ஸ்டார்லிங்க் சிக்னல்களை மட்டும் துல்லியமாகக் கண்டறிந்து முடக்கும் திறன் கொண்டது..
சாதாரண ஜாமர்கள் சிறிய பகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், ஈரான் இப்போது பயன்படுத்தும் ராணுவத் தரத்திலான கில் ஸ்விட்ச், ஒரு நகரம் அல்லது மாநிலம் முழுவதும் உள்ள செயற்கைக்கோள் தொடர்புகளை ஒரே நேரத்தில் முடக்கும். கில் ஸ்விட்ச், எந்த இடத்திலிருந்து இயக்கப்படுகிறது என்பதை எளிதில் கண்டறிய முடியாது.
உக்ரைன் போரில் ஸ்டார்லிங்கை முடக்க ரஷ்யா பயன்படுத்திய Pole-21 மற்றும் Tirada-2 தொழில்நுட்பங்களை இது ஒத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல், அதிக ஆற்றல் கொண்ட மைக்ரோவேவ் கதிர்கள் மூலம் மின்னணு சாதனங்களைச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை சீனா வழங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஈரானில் 2022- ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த ஈரான் அரசு இணையத்தைத் துண்டித்தது. அப்போது, மஸ்க் ஸ்டார்லிங்க் சேவையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அமெரிக்க அரசும் இதற்கு அனுமதி வழங்கியதால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக ஈரானில் ஸ்டார்லிங்க் சேவையை அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டபோது, ஈரான் அரசு மீண்டும் இணையக் கட்டுப்பாடுகளை விதித்தது. அப்போது மஸ்க் மீண்டும் ஸ்டார்லிங்க் சேவையைச் செயல்படுத்தினார். குறிப்பாக ஜூன் 14- ஆம் தேதி, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் இணையத்தைத் துண்டித்தபோது, மஸ்க் எக்ஸ் தளத்தில் "The beams are on" என்று பதிவிட்டு இணையம் செயல்படுவதை உறுதிப்படுத்தினார்.
ஆனால், இம்முறை அதி நவீன தொழில்நுட்பத்தை ஏவி மஸ்க்-கிற்கு பெப்பே காட்டுகிறது ஈரான் அரசு.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments