
திருமணம் செய்தால் 50,000 டிராம் (சுமார் 17,200 வெள்ளி) சன்மானம். குழந்தை பிறந்தபின் ஈராண்டில் அந்தத் தொகை இரட்டிப்பாகும்.
வியக்க வைக்கும் அந்தச் சலுகையைத் தமது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார் துபாயைச் சேர்ந்த செல்வந்தர் காலஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor).
அல் ஹப்தூர் (Al Habtoor) குழுமத்தின் நிறுவனரான அவர் அந்த அறிவிப்பைத் தமது X கணக்கில் பகிர்ந்தார்.
"திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவை தனிப்பட்ட முடிவுகள் மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஆற்றவேண்டிய முக்கிய கடமைகள்," என்று அவர் சொன்னார்.
அரசாங்க முயற்சிகள் ஒரு புறம் இருக்க நாட்டிலுள்ள அனைவரும் திருமணம் செய்யவும், பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க முயற்சிகள் எடுப்பது முக்கியம் என்றார் அல் ஹப்தூர் .
இணக்கமான சமூகம், வலுவான தேசம் உருவாகக் குடும்பங்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments