Ticker

6/recent/ticker-posts

வக்பு சொத்து மோசடி ஜமீயத்துல் உலமா செயலாளர் CID யின் முன் ஆஜர்


தெஹிவளையில் அமைந்துள்ள பாபக்கர் பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது.

இது சம்பந்தமாக பொதுமக்கள் பல வழக்குகளை சந்தித்த போதிலும் இந்த இடத்தின் வரலாற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் இது ஒரு வக்பு சொத்தாக பதியப்படவேண்டும் என முடிவு செய்து,  இதை வக்பு சொத்தாக பதிவு செய்யும் படி நிதிமன்றம்  வக்பு சபைக்கு உத்தரவிட்டது. அதன்படி இது ஒரு வக்பு  செய்யப்பட்ட பள்ளிவாசலாக 29. 11. 2023           அன்று வக்பு சபையால் பதிவு செய்யப்பட்டது.

இது பள்ளிவாசல் அல்ல நமது சொத்து என இதை அபகரித்தவர்கள் இந்த விடயத்தில் தோல்வி அடையவே, நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் நீதிமன்றத்திற்கே தண்ணீர் காட்டி, நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கப்பட்டு 12     நாட்களில்  மீண்டும் ஒரு அறக்கட்டளையை (Trust) எழுதி அதை 06. 12 . 2023 ஆம் ஆண்டு  தெல்கந்த  காணிப்பதிவாளர் காரியத்தில் பதிவு செய்து அதே ஆம் திகதி முஸ்லிம் கலாச்சார அமைச்சில் பணிப்பாளராக இருந்த பைசல் அவர்கள் அதற்கு அனுமதி அளித்து, அதே 6 ஆம் திகதி  வக்பு சபை அதற்கு  அனுமதி அளித்து,  அதே 06 ஆம் திகதி  இது ஒரு பள்ளிவாசல் அல்ல என வாதாடியவர்கள் அதன் நம்பிக்கையாளர்களாக வக்பு சபையால் நியமிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் இது ஒரு பள்ளிவாசல் அல்ல என வாதாடியவர்கள் தற்போது பள்ளிவாசளின்  நம்பிக்கை பொறுப்பாளர்களாக வக்கப் சபை நியமித்தது.

இதன் மூலம் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு இக்காணி எந்த நிலையில் இருந்ததோ மீண்டும் பழைய நிலைக்கு சிலரின் அதிகாரத்தின் கீழ் சென்றது. 

இந்த விடயமானது இலங்கை வக்கவ்சபை வரலாற்றில் மின் வெட்டும் வேகத்தில் நடந்த ஒரு கண் கட்டி வித்தையாகும். 

இந்த வேகத்தில் இந்த வேலை நடப்பதற்கு வக்பு  சபையின் ஒரு நாள் சேவைக்கு வக்பு  அதிகாரிகள்  எந்த விலை போனார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விடயத்தில் நீதிமன்றமும் மக்களும் இவர்களால் ஏமாற்றப்பட்டனர்.

தற்போது இவ்விடயம் C I D யின் கவனத்தில் கொண்டுவரப்பட்டு C I D பனிப்பாளரின் நேரடி உத்தரவின் படி தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இவ்விடத்தில் அகில இலங்கை ஜமீயத்தில் உலமாவின் செயலாளர்களில் ஒருவரும் ஆவணங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதால்,  பல அறிவித்தல்களை அவர் நிராகரித்த நிலையில், CID யின் கீழ் இயங்கும் கல்கிசை
SClB ( spcial crim investication beru ) யின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த ஆவணங்கள் சம்பந்தமான வழக்கு SCIB யினால் கங்கொடவில நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
( B 59672/26 )

இந்த விடயத்தில் இது ஒரு மோசடி, சட்டவிரோதமானது என நீதிமன்றம் கருதும்பட்சத்தில், கௌரவ நீதிமன்றம் இது சம்பந்தமாக இவர்களுக்கு எதிராக சில வித்தியாசமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகளும் ஏற்படலாம். இது கௌரவ நீதிமன்றத்தின் முடிவில் உள்ளது.

மேலும் இது சம்பந்தமாக சில வருடங்களுக்கு முன் ஜமீயத்துல் உலமா தலைவருக்கு வாய் மூலமாகமூலமாகவும் , எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவர் கூறியபடியே, கூறிய விதத்தில் கடிதம் எழுதி வழங்கப்பட்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மேலும் இதை அப்பகுதி மக்களுக்கு பள்ளிவாசலாக பதிவு செய்து கொடுக்கும்படி ஜமீயத்துல் உலமா தலைவர் பலரின் முன்னிலையில் சாட்சியங்களாக வைத்து உத்தரவிட்டும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதாக தலைவருக்கு வாக்குறுதி அளித்தும், அனைத்து வாக்குறுதிகளையும் மீறினார்.

இந்த நிலையில், சென்ற வருட ஜமியத்துல் உலமாவின் பதவித் தெரிவுகளில் சம்பந்தப்பட்டவருக்கு  முன்னிலிருந்த குறித்த பதவியும்ர வழங்கப்பட்டது.

இவர் ஜமீயத்தில் உலமாவில் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்ததால், இவருக்கு எதிராக வழக்காட எந்த ஒரு முஸ்லிம் சட்டத்தரணியும் முன் வரவில்லை.

இறுதியாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதி சட்டத்தரிணியே
பள்ளிவாசலுக்காக நீதிமன்றத்தில் இலவசமாக வழக்காடி, வக்பு சபையில் பதிவு செய்து தந்தார்.

நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஆதரவாக தோன்றிய ஒரு முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரணி, இதை பள்ளிவாசலாக பதிவு செய்யக்கூடாது இது பள்ளிவாசல் அல்ல எனவும் பணத்திற்காக வாதாடியதை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாவல பள்ளிவாசல் விடயத்தில், ஜமீயத்துல்  உலமா தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த ஜம்மீயத்துல் உலமாவின் முக்கிய பதவிகளில் உள்ள சிலரை  விசாரணைக்கா நியமித்து, விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்ட போதிலும்,  குறித்த நிறுவனத்துக்கு எதிராக விசாரணை நடத்த சென்ற விசாரணை குழுவின் தலைவர், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக மாறியமை ஒரு வரலாற்றில் பதியப்பட வேண்டிய காரியமாகும். 

இதற்கும் தலைவர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாராயினும் அகில இலங்கை ஜமீயத்துல் உலமா என்பது, இந்நாட்டு முஸ்லிம்களின் ஒரு உரிமை சொத்து. இது பாதுகாக்கப்பட வேண்டும். இது ஒரு தனிநபரின் சுகபோக வாழ்க்கைக்காக நம் முன்னோர்களால் பெற்றுத் தரப்பட்ட உரிமை அல்ல. 

இவ்வாறான ஒரு உரிமை கொண்ட அமைப்பு இலங்கையில் இதன் பின் உருவாக்குவது கனவு.  இதன் கௌரவத்தையும், தனித்துவத்தையும், மகத்துவத்தையும் பாதுகாப்பது தலைவரின் தலையாய கடமையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேட்டை நிருபர்

 


Post a Comment

0 Comments