Ticker

6/recent/ticker-posts

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!


அதிக நேரம் யூட்யூபில் ஷார்ட்ஸ் பார்க்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த யூட்யூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மக்களிடையே யூட்யூப் பிரபலமாக உள்ள நிலையில் மக்கள் அதில் பல வீடியோக்களை பார்க்கின்றனர். முக்கியமாக யூட்யூப் ஷார்ட்ஸ் எனப்படும் 1 நிமிட அளவு கொண்ட குறு வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 

நேரம் போவது தெரியாமல் தொடர்ந்து ஸ்வைப் செய்து ஷார்ட்ஸ் பார்த்துக் கொண்டே இருப்பதால் மன உளைச்சல், கவனச்சிதறல், நினைவுக்கூறும் தன்மை குறைதல் என பல பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பழக்கம் சிறுவர்கள், குழந்தைகளிடையே அதிகம் உள்ளது.

இதை கவனத்தில் கொண்டு யூட்யூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எவ்வளவு நேரம் ஷார்ட்ஸ் பார்க்க விரும்புகிறோமோ அதை செட் செய்து வைத்து விட்டால், தொடர்ந்து ஷார்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த கால அளவை நெருங்கியதும் வீடியோ பாஸ் ஆவதுடன், கால அளவை தாண்டி விட்டதாக அறிவிப்பும் வரும். இதனால் ஷார்ட்ஸ் மோகத்தில் உள்ளவர்கள் தங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் இருக்க இந்த வசதியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

webdunia

 


Post a Comment

0 Comments