Ticker

6/recent/ticker-posts

பீக்கங்காய் புளி சட்டினி


தேவையானவை
காக்கிலோ பீக்கங்காய்
இரண்டு பச்சைமிளகாய்
2-வெரிய வெங்காயம்
6-சின்ன வெங்காயம்
5-பல்லு பூண்டு
2-பட்ட மீளகாய்
1 தேக்கரண்டி  கடுகு
1-தேக்கரண்டி சிறு சீரகம்
ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
ஒரு எலுமிச்சம் அளவு பழப்புளி கரசல்
தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள்
உப்பு கறிவேப்பிலை  தாளிக்க நல்லெண்ணை

செய் முறை
பெரிய வெங்காயம் /பச்சைமிளகாய்/மஞ்சள் தூள் /உப்பு /பூண்டு /பீக்காங்காய்அவைகளை நறுக்கிப் போட்டு சிறுதளவு நீர் விட்டு அவித்து எடுத்து ஆற விடவும்

பின்னர் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து விட்டு
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறு வெங்காயம் /கடுகு /பட்டமிளகாய் /சீரகம் /பெருங்காயத் தூள் இவைகளைப் போட்டு வதக்கவும் நன்றாக வதங்கிய வாசனை  வரும் போது அரைத்த பீக்கங்காயைப் போட்டு புளிக் கரசலையும் இட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு உப்பு பார்த்து இறுதியில் கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும் (புளி உப்பு காரம் அதிகம் இருப்பது நன்று)

இவை சளிக்காச்சலுக்கு குழைந்த சாதத்துடன் (சோறு)  சேர்த்து உண்ண உகந்தவை

கலா


 


Post a Comment

0 Comments