
13.அடக்கம் உடைமை
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் இருந்தால் ஒளிமயமாகும் வாழ்வு! அடங்காமை என்றும் இருள்.
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
போற்றும் அடக்கத்தைக் காக்கவேண்டும் செல்வம்போல்! வேறுசெல்வம் இஃதைப்போல் ஏது.
குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறித் தாற்றின் அடங்கப் பெறின்.
அடக்கம் அறிவுடைமை என்றறிந்து வாழ்த்தால் அகங்குளிர வாழ்த்தும் உலகு.
குறள் 124:
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
நிலையில் பிறழாமல் தன்னடக்கம் கொள்வோன் பெருமை மலையின் பெரிது.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
எல்லோர்க்கும் பண்பே பணிவாகும்/ மேலுமொரு செல்வமாகும் செல்வந்தர்க் காம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments