
இனியவை கூறல்
குறள் மொழி 46
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.குறள் எண் :96
குறள் மொழியின் பொருள் :
நன்மையைத் தரும் இனிய சொற்களை உவப்புடன்
பயன்படுத்திப் பேசி, செயல்படுபவன் என்றால் அங்கு
தீமைகள் அழிந்து அறம் சார்ந்த நன்மைகள் வளரும்.
நபி மொழி:
நிச்சயமாக நீங்கள் செய்யும் நன்மைகள், தீமைகளை
நீக்கிவிடும்; மன நிறைவைத் தரும்.
இறை வசனம். ஆதாரம் : திருக் குர்ஆன் 11/114
ஊழ்
குறள் மொழி 47
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.குறள் எண் :376
குறள் மொழியின் பொருள் :
தமக்கு உரிமை இல்லாத செல்வத்தை, பொருளை
எப்படிக் காப்பாற்றினாலும் அது நிற்காது; நமக்குக்
கிடைக்காது. அது போல், தனக்கு உரிமையுள்ள நமக்கான செல்வமோ, பொருளோ அதைத் தூக்கி எறிந்தாலும் அது நம்மை விட்டுப் போகாது.
நபிமொழி:
அல்லாஹ்வின் நாட்டம். இயற்கை விதியானது என்ன
வெனில், உங்களுக்கு விதிக்கப்பட்டது இரண்டு மலைகளுக்கு இடையே இருந்தாலும் அது உங்களை வந்துசேரும்,அதுபோல், உங்களுக்கு விதிக்கப்படாதது, உங்கள் உதடுளுக்கு இடையே இருந்தாலும் நீங்கள் அதனை ஒருபோதும் அடையவே மாட்டீர்கள்.
ஆதாரம் : நூல் அஹமத்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments