Ticker

6/recent/ticker-posts

46 தொகுதிகளை கேட்கிறதா பாஜக? அதிமுக தலைமைக்கு இக்கட்டான நிலையா?


தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சுமார் 20 சதவீத இடங்களை பாஜக கேட்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ், வரும் தேர்தலில் 20 சதவீத தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்றும், கூட்டணியில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி பார்த்தால், பாஜக சுமார் 46 தொகுதிகளை அதிமுகவிடம் கோரக்கூடும் எனத் தெரிகிறது. கடந்த தேர்தல்களை விட இந்த முறை பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறப்படுவதால், இந்த எண்ணிக்கை நியாயமானது என அந்த கட்சியினர் கருதுகின்றனர்.

இருப்பினும், இத்தனை இடங்களை விட்டுக்கொடுக்க அதிமுக தலைமை தயாராக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 46 தொகுதிகள் என்பது அதிமுகவின் வெற்றியை பாதிக்கக்கூடும் என ஒரு தரப்பினர் அஞ்சுவதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது. வரும் மாதங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முறைப்படி தொடங்கும் போது மட்டுமே இது குறித்த இறுதி தெளிவு கிடைக்கும்.

webdunia


 


Post a Comment

0 Comments