Ticker

6/recent/ticker-posts

காதலியுடன் உறவு... ஆபாச படத்தை ஆசையாக பார்த்தபோது... காத்திருந்த அதிர்ச்சி!


கடந்த 2023ஆம் ஆண்டில் தெற்கு சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அவரது காதலியுடன் தங்கியிருந்துள்ளார். எரிக் ஹாங்காங்கை சேர்ந்தவர். சில வாரங்கள் கழித்து, எரிக் இணையத்தில் ஆபாச படங்களை பார்த்து வந்தபோது திடீரென ஒரு வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த எரிக்

அவர் அந்த ஹோட்டல் அறையில் அவரது காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோதான் அது. ஹோட்டல் அறையையும், அதன் சுற்றத்தையும் பார்த்ததும் ஏதோ தெரிந்த இடம்போல் இருக்கிறதே என்பதை எரிக் உணர்ந்துள்ளார், ஒரு கட்டத்தில் வீடியோவில் இருப்பது தாங்கள்தான் என்பதையும் அவருக்கு தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில், எரிக் மற்றும் அவரது காதலி அறைக்குள் நுழைவதில் இருந்து தங்களின் லக்கேஜ்ஜை அறையில் வைப்பது, அதன்பின் கட்டிலில் உடலுறவு மேற்கொண்டது உள்ளிட்ட அனைத்தும் அதில் இருந்துள்ளது. அவர்களுக்கே தெரியாமல் ஹோட்டல் அறையில் மறைமுகமாக கேமராவை வைத்து அவர்களை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவை ஆன்லைனிலும் பதிவேற்றியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவையும் ஆன்லைனில் பார்த்துள்ளனர்.

உடைந்த போன காதலி

எரிக் மற்றும் அவரது காதலி ஆகியோர் அந்த அறையில் தனிமையில் இருந்ததை மறைமுக கேமரா மூலம் சுமார் ஒரு மணிநேரத்திற்கு வீடியோ எடுத்திருக்கின்றனர் என கூறப்பட்டது. மேலும் இதுகுறித்த அவரது காதலிக்கும் எரிக் தகவல் சொல்லியிருக்கிறார். முதலில் எரிக் சொல்லியபோது, அவரது காதலி ஏதோ நகைச்சுவையாக சொல்கிறார் என நினைத்துக்கொண்டு அதை நம்பவே இல்லையாம். பின்னர் அந்த வீடியோவை பார்த்து அவரது காதலியும் மீள முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் வேலைப் பார்ப்பவர்கள், நண்பர்கள் ஏற்கெனவே அந்த வீடியோவை பார்த்திருக்கலாம் என்ற எண்ணியும் அவர் அதிர்ச்சியில் உறைந்தாராம். 

இதற்கு பிறகு எரிக் மற்றும் அவரது காதலி சில வாரங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே இருந்துள்ளனர். மேலும் அவர்கள் பொதுவெளிக்கு செல்வதாக இருந்தாலும் தங்களின் முகத்தையும் மறைக்கும் வகையில் தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்துதான் செல்வார்களாம். ஹோட்டல் அறையில் தங்குவதை அவர்கள் தவிர்த்தேவிட்டார்களாம்.

ஆபாச வீடியோவை பார்ப்பதையே நிறுத்திட்டேன்' 

இந்தச் சம்பவத்திற்கு பிறகு மறைமுக கேமராக்கள் மூலம் பதிவுசெய்யப்படும் ஆபாச வீடியோக்கள் குறித்த தனது பார்வையே முற்றிலும் மாறிவிட்டதாக எரிக் கூறியிருக்கிறார். இப்போதெல்லாம் ஆபாச வீடியோக்களை பார்ப்பதே பிடிக்கவில்லை என்றும் ஆபாச தளங்கள் பக்கமே போவதில்லை என்றும் எரிக் கூறியிருக்கிறார். இதற்கு முன், திட்டமிடப்பட்டு எடுக்கப்படும் ஆபாச வீடியோவை விட ஸ்பை கேமரா மூலம் எடுக்கப்படும் ஆபாச வீடியோக்களையே எரிக் அதிகமாக பார்த்து வந்ததாக அவரே கூறியிருக்கிறார்.

சீனாவில் தலைவிரித்தாடும் பிரச்னை

இதேபோல் ஸ்பை கேமரா மூலம் எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் அதிகம் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுபோன்ற அனுமதியின்றி எடுக்கப்படும் ஆபாச வீடியோக்களுக்கு தடை நிலவுகிறது. இதுபோன்ற வீடியோக்கள் ரகசியமாக எடுக்கப்படும், பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில்தான் எடுக்கப்படுகிறது. சீனா முழுவதும் உள்ள ஹோட்டல்களில் இருந்து சுமார் 180க்கும் மேற்பட்ட ஸ்பை கேமராக்கள் கைப்பற்றப்பட்டன. ஹோட்டல்களில் இதுபோல் ரகசியமாக எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள், ஆபாச தளங்களுக்கு அதிக தொகைக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

zeenews


 


Post a Comment

0 Comments