நலம் வாழ -மருத்துவப் பகுதி -16

நலம் வாழ -மருத்துவப் பகுதி -16

நல்ல உடல் நலத்தை விரும்பாத ஒருவரை கூட நாம் சந்தித்திருக்க மாட்டோம் இல்லையா...

நாம் எப்போதும் நல்ல உடல் நலத்துடன் இருப்போம் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் நம்மில் பலரும் டாக்டர்களையும் சேர்த்து ஒவ்வொரு நாளும் நமது உடல் நலத்தை இழந்து கொண்டு வருகின்றோம் என்பதுதான்.

இன்றைய சூழ்நிலையில் 2023 ஆம் ஆண்டில் நம் கண் முன்னே தோன்றுகின்ற ஒரு உண்மை.
 
நான் இதை நன்கு அறிவேன் ஏனெனில் உடல் நலப் பாதுகாப்பு தான் எனது பணி. ஒவ்வொரு நாளும் என்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் அவர்களது உடல்நலம் ஒரு விதத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பது தான் எனது வேலை.

ஒரு நோயாளிக்கு நீரழிவு இருக்கலாம்,அல்லது சீர்கேடு அடைந்த வாதம் இருக்கலாம், மற்றொரு நோயாளிக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம், அல்லது பக்கவாதம் வந்திருக்கலாம், மற்றொருவருக்கு தீவிரமான புற்றுநோய் உள்ளது என்றும் அவர் ஒரு சில மாதங்கள் தான் உயிரோடு இருப்பார் என்றும் கூற வேண்டி இருக்கலாம். 

ஒவ்வொருவரும் தங்களது உடல் நலத்தை நன்கு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் அல்லது மீண்டும் சீர் செய்து கொள்ள விரும்புகிறார்கள். 

ஆனால் இதை எவ்வாறு அடைவது என்று அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் தெரிந்திருக்கவில்லை.மருத்துவர்கள் ஆகிய நாங்கள் மருந்துகளையும் நோய்களையுமே சாய்ந்து சார்ந்திருப்பதால் பெரும்பாலான நேரத்தையும் முயற்சியையும் ஒரு நோயும் செயல்படும் முறைகளை கண்டறிந்து அதற்கான மருந்தை வழங்குவதிலும் அல்லது எங்களது நோயாளிக்கு ஏற்ற சிகிச்சை திட்டத்தை வகுத்துக் கொடுப்பதிலும் செலவிடுகிறோம்.

நமது உடல் நலத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்வதே சிறந்தது. அதை இழந்த பின்பு மீண்டும் பெற முயல்வது கடினம் .இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் நோய் தடுப்பதுதான் ஒரு டாக்டரின் முதல் பணி.

ஆனால் உங்களது உடல்நலத்தை பாதுகாப்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் யாரிடம் செல்வீர்கள்? உங்களது டாக்டர் விவரங்களை பற்றி உங்களிடம் கூறியுள்ளாரா? நோய் தடுப்பு மருத்துவம் பற்றி சமுதாயம் வெறும் வாய் பேச்சில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. நோய் தடுப்பு மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போல் தோற்றம் மட்டுமே ஏற்படுத்துள்ளது.

ஆனால் நாம் உடல் நலம் பேணும் செலவினத்தில் ஒரு விழுக்காடு பணத்தை மட்டுமே நோய் தடுப்பு மருந்துக்காக மருத்துவத்திற்காக செயல்படப்படுகிறது. எடுத்துக்காட்டாக மார்பகப் புற்றுநோய்க்கான எக்ஸ்ரே பரிசோதனை ப்ரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை போன்ற சோதனைகள் புற்றுநோயை எந்த அளவுக்கு முன்னதாக  கண்டறிய முடியுமோ, அவ்வளவு முன்னதாக கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை முறைகள் உங்களுக்கு கொழுப்பு சத்து அதிகமாக உள்ளதா? நீரழிவு நோய் உள்ளதா? அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற தோன்றியுள்ளதா? என்று அறிய விரும்புகின்றனர்.

ஆனால் நல்ல உடல் நலத்தை பெற தங்கள் வாழ்க்கை முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை பற்றி அவர்களுக்கு புரிய வைக்க குறைந்த நேரத்தையே நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏனெனில் ஒவ்வொருவரும் நோய்கள் சிகிச்சை அளிப்பதில் மட்டுமே  முன்னுரிமை அளிக்கின்றனர் .

ஆங்கிலத்தில் கூறப்படுவது போல prevention is better than cure.என்பதைப் போல நோய் வருவதற்கு முன்பு அந்த நோய் வராமல் பாதுகாப்பது மட்டுமே சிறந்த ஒரு வழி வகையாகும்.
 எனவே தான் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவின் மூலமாக எவ்வாறு நமது உடலில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பது என்பதை பற்றி நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கக்கூடிய தாது உப்பு மெக்னீசியம்.

முதலில் மெக்னீசியம் எதில் அதிகமாக உள்ளது என்பதை பார்க்கலாம்
.
பூசணி விதை 
சியா விதை 
பாதாம்
கீரை
வேக வைத்த பட்டாணி 
முந்திரி 
வேர்க்கடலை
வெண்ணை 
அரிசி 
தீட்டப்படாத அரிசி
பால்
மீன்
பொதுவாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் மெக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது.

பச்சை காய்கறிகள் கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது. 

இறைச்சி போன்றவற்றில் மெக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது.
நமது உடலில் மெக்னீசியம் மிக முக்கிய பங்காற்று வருகிறது ஒரு நாள் உண்ணக்கூடிய உணவை ஆற்றலாக மாற்றுவதில் இருந்து அமினோ அமிலங்களில் இருந்து புதிய புரதங்களை உண்டாக்குவது,டிஎன்ஏ மற்றும் ஆர்எ வை உருவாக்க மற்றும் சரி செய்ய உதவுகிறது.

தசை சுருக்கம் மற்றும் தசை தளர்வாக இருப்பதற்கும் உதவுகிறது.நரம்பு மண்டலங்களை ஒழுங்குமுறை படுத்தவும் உங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முழுவதும் செய்திகளை அனுப்பும் நரம்பியல் கடத்திகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 

இது நமது மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய மூளையின் செயல்பாடுகளில்  மெக்னீசியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .
இது பொதுவான பயன்கள் மட்டும் தான் இதில் இன்னும் பல பல பயன்கள் மெக்னீசியத்தினால் நாம் உணவை மெக்னீசியத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது பல பயன்கள் இருக்கின்றன.

அவற்றை அடுத்த வாரம் நாம் அடுத்த தொடரில் காணலாம்

என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


 



1 Comments

Previous Post Next Post