
இரவு 2 மணி வரை டிவி பார்க்கும் பழக்கம், காலை தினமும் கிரீன் டீ..101 வயது பாட்டியின் தலைகீழ் வாழ்க்கை முறை..!
ஒரு சிலர் குறிப்பாக தங்களின் வயது மற்றும் அவர்கள் பின்பற்றும் அன்றாட பழக்கவழக்கங்களில் பிறரை ஆச்சரியப்படுத்தும் மற்றும் வியக்க வைக்கும் விதத்தில் வாழ்கிறார்கள். அந்த வகையில் தென்கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தின் வென்ஜோ எனற பகுதியை சேர்ந்த 101 வயது மூதாட்டியான ஜியாங் யுவ்கின் (Jiang Yueqin) இது போன்ற ஒரு நபர் தான்.
101 வயதிலும் கூட தனது வழக்கத்திற்கு மாறான அன்றாட பழக்கவழக்கங்களாலும், ஆற்றலாலும் பலரின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த மூதாட்டி இரவு நேரங்களில் வெகுநேரம் டிவி பார்த்து பொழுதை கழிப்பதுடன், மாலை நேரத்தில் தான் விரும்பும் நொறுக்குத்தீனிகளை சுவைத்து மகிழ்கிறார். இவரது வித்தியாசமான பழக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Jiang Yueqin தனது இளமைப் பருவத்திலேயே தனது வாழ்க்கையை கணிசமாக வடிவமைக்க கூடிய வகையில் சில முடிவுகளை எடுத்தார். அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்புகளை நிராகரித்து, ஒரு முழுநேர இல்லத்தரசியாக மாறியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது.
மகிழ்ச்சியான இல்லற வாழ்வை இவர் வாழ்ந்தற்கு அடையாளமாக ஏழு குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டார். குடும்பத்தின் மீதான இந்த அர்ப்பணிப்பே அவர் இன்று பின்பற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களை வடிவமைத்துள்ளது.
ஆன்லைனில் இவர் சமீபத்தில் பிரபலமடைய 'தலைகீழ் தினசரி வழக்கம்' என்று அழைக்கும் ஒரு பழக்கமே காரணம். அறிக்கைகளின்படி இவர் தாசரி இரவு 2 மணி வரை தூங்காமல் டிவி பார்க்கிறார். அடுத்த நாள் காலை 10 மணியளவில் அவர் அலாரம் கடிகாரம் இல்லாமலேயே இயல்பாகவே எழுந்துவிடுகிறார். எழுந்ததும் அவருடைய முதல் வேலை ஒரு கப் அடர்த்தியான கிரீன் டீ குடிப்பது தான். "என் அம்மா ஒரு இளைஞரைப் போலவே இருக்கிறார்; அவர் ஒரு உண்மையான இரவு நேரப் பறவை! அவர் இரவு நேரங்களில் தாமதமாகத் தூங்கினாலும், அவருடைய தூக்கத்தின் தரம் மிகச் சிறந்தது.
படுத்த சில நிமிடங்களிலேயே அவர் தூங்கிவிடுகிறார். இந்த வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் உருவானது," என்று அவருடைய மகள் யாவ் சாங்பிங் கூறினார். ஜியாங்கிற்கு ஒரு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கையில் காயமானது, இத்தனையோ தொடர்ந்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின் முற்றிலுமாக இவரது இரவு நேரப் பழக்கவழக்கங்கள் மாறத் தொடங்கின.

அதிக ஓய்வு நேரம் கிடைத்ததால், அவர் பகலில் நீண்ட நேரம் தூங்கத் தொடங்கினார். இந்த மாற்றம், இரவில் சீக்கிரம் தூங்க முடியாமல் போனது. இதனால் காலப்போக்கில், இரவில் தொலைக்காட்சி பார்ப்பதை அவரது இயல்பான பழக்கமாக்கி கொண்டுள்ளார்.
காலை 10 மணிக்கு எழுந்த பின் காலை மற்றும் மதிய உணவை சேர்த்து சாப்பிடுகிறார், மேலும் மாலை 6 மணியளவில் இரவு உணவை எடுத்து கொள்கிறார். இதனை தொடர்ந்து பசித்தால் பிஸ்கட்டுகள் அல்லது பிற தின்பண்டங்களை சாப்பிடுகிறார்.water chestnut-லிருந்து தயாரிக்கப்படும், மொறுமொறுப்பான உள்ளூர் பலகாரமான மாடிசாங் இவருக்கு மிகவும் பிடித்தமானது. தவிர உருளைக்கிழங்கு சிப்ஸ், ஷாகிமா (சீன அரிசி கேக் வகை இனிப்பு) மற்றும் உலர் சர்க்கரைவள்ளிக்கிழங்கு. பேரீச்சம்பழங்கள் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடுகிறார்.
ஜியாங்கின் வயதைக் கருத்தில் கொள்ளும் போது, இவரது பல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கிறது. அவருக்கு இதுவரை எந்த பல் சிகிச்சையும் செய்யப்பட்டதில்லை, மேலும் அவர் இன்னமும் தனது இயற்கையான பற்களையே முழுமையாக நம்பியிருக்கிறார். நொறுக்கு தீனிகளைத் துண்டுகளாக உடைப்பதில்லை. அவர் அவற்றை அப்படியே வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிடுவதாக அவர் மக்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது விருப்பமான உணவுகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து சாப்பிட்டு மகிழ்கிறார்.
இவரது கணவர் யாங் என்ற குடும்பப்பெயர் கொண்டவர், ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவரது இழப்பு இருந்த போதிலும், ஜியாங் தனது அன்றாட வழக்கத்தையும் சுதந்திரத்தையும் பேணி வருகிறார். இவரது அன்றாட வழக்கத்தில் “நன்றாகச் சாப்பிடுவது, நன்றாகத் தூங்குவது, மற்றும் தினமும் ஒரு கோப்பை கிரீன் டீ அருந்துவது ஆகியவை அனைத்தும் முக்கியமானவை.
இருப்பினும், உண்மையில் முக்கியமானது அவரது மனநிலைதான். அவர் ஒருபோதும் கோபத்தைத் தன் மனதில் வைத்துக்கொள்வதில்லை அல்லது எந்த விஷயங்களையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. மனக்கசப்புகளை மனதில் சுமப்பதில்லை. தனது வாழ்க்கையை தெளிவுடனும் அமைதியுடனும் வாழ்கிறார் என்று அவரது மகள் யாவ் கூறினார்.
ஜியாங்கின் கதை சோஷியல் மீடியாக்களில் பல விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு யூஸர், "ஒருவரின் நேர்மறை மனப்பான்மை எல்லாவற்றையும் சிறப்பாக ஆக்குகிறது" என்றார். மற்றொருவர், "குடும்ப நல்லிணக்கமே முக்கியம். கோபம் உங்களைப் பாதிக்க அனுமதிக்கவில்லை என்றால், நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள், நன்றாகத் தூங்குவீர்கள், இது இயல்பாகவே நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments