
பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பில் ஆணைக்குழுவின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Geographic Reference 2024 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சேவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (5) கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் பெண்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இச்சந்திப்பின்போது ஆணைக்குழு அதன் ஆணைக்கு அமைவாக இயங்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், கட்டமைப்பு ரீதியான செயற்திறனை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
jvpnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments