Ticker

6/recent/ticker-posts

மிக் விமான ஊழல் வழக்கு: உதயங்க வீரதுங்க வழக்கு செப். 2க்கு ஒத்திவைப்பு


முன்னாள் ரஷ்யாவுக்கான தூதர் உதயங்க வீரதுங்க உள்ளிட்டோருக்கு எதிராக மிக் விமானங்களை இறக்குமதி செய்ததில் நிதி மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு மீண்டும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

மேலும், அடுத்த நீதிமன்ற நாள் வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு அவர் செய்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments