Ticker

6/recent/ticker-posts

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொலை - "சண்டைநிறுத்த அத்துமீறல்"


ஹமாஸ் அதன் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டது ஆபத்தான, இதுவரை நடந்திராத சண்டைநிறுத்த அத்துமீறல் என்று கூறியிருக்கிறது.

இஸ்ரேல் மேற்கொண்டு தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் பேச்சுவார்த்தையில் உதவும் மற்ற நாடுகளும் தடுக்க வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியது.

இஸ்ஸால்தீன் அல்-ஹதாத் (Izz al-Din al-Haddad) நேற்று முன்தினம் (15 மே) கொல்லப்பட்டார்.

சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்த பிறகு கொல்லப்பட்ட ஆக உயரிய ஹமாஸ் தலைவர் அவர்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களில் அல்-ஹதாத்தும் ஒருவர் என்று கூறினார்.

இதற்குமுன் பல படுகொலை முயற்சிகளில் அவர் தப்பியிருப்பதாக ஹமாஸ் தெரிவித்தது.

ஹமாஸ் படையின் மூத்த அரசியல் தலைவர்களையும் தளபதிகளையும் இஸ்ரேலிய உளவுப்பிரிவும் ராணுவமும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

seithi


 


Post a Comment

0 Comments