Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் எத்தனை பேர் காணாமல் போகிறார்கள்?: நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி கேள்வி


சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக 1,300 பேர் காணாமல் போகிறார்கள் என்று உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி (Fadli Fawzi) முன்வைத்த கேள்விகளுக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

2021ஆம் ஆண்டு முதல் எத்தனைப் பேர் காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்தன; எத்தனைப் பேர் ஒரு மாதத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று  ஃபவுஸி கேள்வி எழுப்பினார்.

காணாமல் போனவர்களைப் புதிய SG Alert அமைப்பின் வழி கண்டுபிடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறதா என்றும் அவர் வினவினார்.

ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்கத் தேவைப்படும் நேரம் மாறுபடலாம்; காவல்துறை அதைக் கண்காணிப்பதில்லை என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

இளம் பிள்ளைகள், முதியோர், அறிவுத்திறன் குன்றியோர் போன்று அதிக உதவி தேவைப்படுபவர்களை அதிகாரிகள் முதலில் தேடுவார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்று அவர் விளக்கம் அளித்தார். 

nambikkai


 


Post a Comment

0 Comments