மனிதனுக்குச் சிறந்த தோழன் நாய் என்று சொல்வார்கள்.

இந்தியாவின் இமாசலப் பிரதேச (Himachal Pradesh) மாநிலத்தில் ஒருவர் இறந்த பிறகும் அவருக்குத் துணையாக இருந்தது அவரது நாய்.
கொட்டும் பனிக்கு இடையே நாய் 4 நாள்கள் கடுங்குளிரில் நின்றதாக NDTV ஊடகம் சொன்னது.
பிகிஷ்த் ரானா, பியூஷ் ஆகிய இரண்டு இளையர்கள் காணொளிகளை எடுப்பதற்காக மலையில் சுற்றிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
பனி கடுமையானதால் அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்லமுடியவில்லை.
இளையர்கள் பனியில் சிக்கி மாண்டதாக NDTV நிறுவனம் சொன்னது.
அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஊர் மக்களுக்கு 4 நாள்கள் ஆகின.
இளையர்களைக் கண்டுபிடித்தபோது அவர்களின் உடல்களுக்கு அருகே நாய் நின்றுகொண்டிருந்தது.
நாய் தொடக்கத்தில் யாரையும் நெருங்கவிடவில்லை.
பின்னர் உடல்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்படும் வரை அது பக்கத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தது.
அது 4 நாள்களாகச் சாப்பிடாமல் உடல்களைக் காவல் காத்ததாக நம்பப்படுகிறது.
நாயின் செயலைக் காட்டும் காணொளிக்கு இணையத்தில் ரசிகர்கள் பலர்.
அனைவரும் நாயின் பாசத்தைப் போற்றினர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments