
சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் அவசர கால கதவு வழியாக பயணி ஒருவர் திடீரென குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து ஏர் அரேபியா விமானம் ஒன்று 284 பயணிகளுடன் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிருங்கும் போது, விமானத்தில் பயணி ஒருவர் அவசர கால கதவைத் திறந்து திடீரென ஓடுபாதையில் குதித்துள்ளார். இதனால் மற்ற பயணிகள் பெரும் பதற்றமடைந்தனர்.
ஓடுபாதையில் குதித்து காயமடைந்த அந்த பயணி, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படை அதிகாரிகள், அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த விசாரணையில், அந்த பயணியின் பெயர் நிஜாமுதீன் செரீப் என்பதும், அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. ஓடுதளத்தில் பயணி தப்பி ஓடியதால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், பெருங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
nakkheeran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments