Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-121


"என்னால் இப்படி ஒரு சூழலில் 
என்ன பண்ணுவது என்று தெரியாமலே விழித்துக் கொண்டு இருக்கும் போதுதான் இப்படி ஓர் விளம்பரம் கண்ணிலும் காதிலும் வந்து விழுந்தது ,எப்படியாவது  இதில் கலந்து கொண்டு என் தேவைக்குப் போதுமான பணத்தைத் தேடிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு  எழுந்தேன் திண்ணையில் இருந்து.

அன்பு பேத்தியின் வாட்டமான முகத்தைப் பார்த்ததும் மனதில் இந்தப் போட்டியில் நானே வெல்ல வேண்டும் எப்பாடு பட்டாவது என்றே வைராக்கியம் கொண்டேன் நெஞ்சில். அதே வார்த்தைகளையே பேத்தியிடம் கூறினேன் கூறி ஆறுதல் வார்த்தை முன் வைத்தேன் எல்லாம் என் கற்றலின் மேலான நம்பிக்கையில்.

நான் நினைத்தவை ஒன்று இங்கே நடந்தவை ஒன்று ஆம் அவைதான் என்னை இந்த வயதிலும் ஓர் அரக்க குணம் படைத்தவனைப் போல் மாற்றியது. என்ன என்று தானே யோசிக்க வைக்கின்றது உங்களை.

அது வேறு ஒன்றுமில்லை  நாம்  எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் தேர்வு செய்து எடுத்து விட்டு ஏனையோரை அனுப்பி விடுவார்கள்  அல்லது வருவோர் எல்லோரும் இணைந்தே பணியாற்றிடக் கட்டளை இடுவார்கள் யார் வைத்தியம் பார்த்தாலும் எல்லோருக்கும் சம உரிமையும் சன்மானமும் கிடைத்திடும் எப்படியோ பணத்தோடு திரும்பிடலாம் நான் என்றே நம்பி வந்தேன்  குமரா.

ஆனால் இங்கு நம்பர் படி பணி தொடங்கிட வேண்டும் என்றதும் உண்மையிலே மனதளவில் நொந்து போய் விட்டேன் அதைக் காட்டிக் கொள்ளாமலே உன்னை நச்சரித்தேன் இருந்தும் நெஞ்சில் ஒரு ஓரமாய் நம்பிக்கை ஈரமாகவே இருந்தது நீ வெற்றி பெற மாட்டாய் வாய்ப்பு நம் கை மாறிடும் என்னும் நோக்கம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments