Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-9


இனியவை நாற்பது-17

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. 

விளக்கம்:

நண்பர்களுக்கு உதவுவது இனிது. 
யாரிடமும் ஒட்டாதவர்களைக் கூட நண்பர்களாக்கிக் கொள்வது இனிது.
பல கருவிகள் வைத்துள்ள மெய்க் காப்பாளருடன் இணைந்திருப்பது இனிது.

இனியவை நாற்பது-18

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.

விளக்கம்:

முதிர்ச்சி பெற்றுள்ள  பெரியவர்கள் வாழும் ஊர்களில் வாழ்வது இனிது.
அற வழியில்  தவ வாழ்வு வாழ்பவர்களின் மாட்சிமை இனிது. 
சிறப்பு பெற்ற பெற்றோரை அவர்கள் இருக்கும் இடம் போய்  காலையில் வணங்கி மகிழ்வது இனிது.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments