Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க பேராதிக்கம்: சுதந்திரம் பேசும் சாம்ராஜ்யம்!-2

போர் மூலம் ஜனநாயகமா?

இராக், ஆப்கானிஸ்தான், வியட்நாம் – ரத்தத்தில் எழுதப்பட்ட அமெரிக்க வெளிநாட்டு கொள்கை!

“நாங்கள் போர் செய்கிறோம்;உங்களை காப்பாற்றவே.”
இந்த ஒரு வாக்கியம்,கடந்த நூற்றாண்டில் மில்லியன் கணக்கான உயிர்களை புதைத்துவிட்டது.

அந்த வாக்கியத்தின் உரிமையாளர்,அமெரிக்கா.

அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் மையத்தில்
ஒரு ஆபத்தான கோட்பாடு உள்ளது:

 “போர் செய்தால்தான் ஜனநாயகம் வரும்.”ஆனால் வரலாறு கேட்கிறது,அந்த ஜனநாயகம் யாருக்காக?
அதன் விலை யார் செலுத்தினார்கள்?

வியட்நாம்: 

கம்யூனிசம் என்ற பெயரில் கொல்லப்பட்ட ஒரு நாடு

1950–70கள்.வியட்நாம் ஒரு சிறிய நாடு.அமெரிக்கா ஒரு உலக வல்லரசு.

காரணம்:
“கம்யூனிசம் பரவுகிறது.”

அமெரிக்க குண்டுகள்:

பள்ளிகள் மீது விழுந்தன.விவசாய நிலங்களை எரித்தன.குழந்தைகளை கொன்றன.

“Agent Orange” போன்ற ரசாயன ஆயுதங்கள் இன்றும் வியட்நாம் மக்களின் உடலில் விஷமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

இறுதியில் என்ன நடந்தது?

அமெரிக்கா தோல்வியடைந்தது.வியட்நாம் சிதைந்தது.

ஜனநாயகம் கிடைத்ததா?

இல்லை. ஒரு தலைமுறை போரின் சுமையோடு வாழ வேண்டிய நிலை.
ஆப்கானிஸ்தான்: 

20 ஆண்டுப் போர், பூஜ்யப் பலன்

“9/11” தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா சொன்னது:
“பயங்கரவாதத்தை அழிக்கிறோம்.”,   “ஆப்கானிஸ் தானுக்கு ஜனநாயகம் தருகிறோம்.”

20 ஆண்டுகள்.டிரில்லியன் டாலர்கள்.   ஆயிரக் கணக்கான வீரர்கள்.லட்சக்கணக்கான பொதுமக்கள்.

இறுதியில்?

 தாலிபான் மீண்டும் ஆட்சி.
 மக்கள் மீண்டும் பயம்.
 நாடு முழுவதும் அழிவு.

இந்த 20 ஆண்டுகள் யாருக்கு லாபம்?

ஆயுத நிறுவனங்களுக்கு போர் ஒப்பந்தக்காரர்களுக்கு

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு?
 கண்ணீர்.
 அகதி வாழ்க்கை.
 நம்பிக்கை இழப்பு.

இராக்: 

பொய்யில் தொடங்கிய ஒரு போர்

அமெரிக்கா உலகிற்கு சொன்ன காரணம்:
“Mass Destruction Weapons (WMD) இருக்கிறது.”

பிறகு தெரிய வந்த உண்மை:
அது பொய்.

ஆனால் அதற்குள்:
ஒரு அரசு கவிழ்க்கப்பட்டது,ஒரு நாடு சிதைந்தது
ஒரு சமூக அமைப்பு முற்றிலும் உடைந்தது

இராக் இன்று:

உள்நாட்டுப் போர்,தீவிரவாத குழுக்கள்,அரசியல் குழப்பம்

இந்த போர் ஜனநாயகம் தந்ததா?

அல்ல.

அது ஒரு அதிகார வெற்றிடத்தை உருவாக்கியது.
அந்த வெற்றிடத்தில் தான் ISIS போன்ற கொடூரங்கள் வளர்ந்தன.

போர் என்பது விபத்து அல்ல, வணிகம் .

அமெரிக்காவில் போர் என்பது ஒரு பெரும் தொழில்.

Lockheed Martin
Raytheon
Boeing

இந்த நிறுவனங்களுக்கு போர் என்றால் லாபம்.
அதனால் தான் புதிய எதிரி எப்போதும் தேவை.

ஒரு நாடு சிதைந்தால், அது “collateral damage”.
ஆனால் பங்கு விலை உயர்ந்தால், அது “success”.

ஜனநாயகம் – ஒரு சாக்கு

இந்த மூன்று நாடுகளும் ரே உண்மையை சொல்கின்றன:

அமெரிக்கா போர் செய்கிறது ஜனநாயகத்திற்காக அல்ல;
தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த.

ஒரு நாட்டின் மக்கள் தங்கள் எதிர்காலத்தை  தாங்களே தீர்மானிக்க அமெரிக்கா அனுமதிப்பதில்லை.

போர் மூலம் ஜனநாயகம் ஒருபோதும் உருவாகவில்லை.
அது உருவாக்கியது,

சாம்பல்

அகதிகள்

வெறுப்பு

இந்த தொடர் கேட்கும் கேள்வி இதுதான்:
 “உலகின் அமைதி, ஒரு நாட்டின் கையில் இருக்க வேண்டுமா?”

அடுத்த பகுதி:
“புரட்சி ஏற்றுமதி,லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க கைரேகை”

(தொடரும்)


 


Post a Comment

0 Comments