
முகநூலில் இதை படித்தேன்
"சாலையோர நடைமேடையில் முகம் துடைக்கும் துண்டுகளை விற்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது; அவர் அங்கு வந்த மக்களிடம் நன்றாக பேசியபடி துண்டுகளை வாங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் தோற்றத்தில் நன்றாக உடையணிந்தவராகவும் பல்வேறு மொழிகள் பேசியதாலும் எனக்கு அவர் மீது ஆர்வம் ஏற்பட்டது; நான் அவரிடம் நெருங்கி பேசினேன். அவர் ஒரு புகழ்பெற்ற எம்என்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஐஐடி பொறியியல் பட்டதாரி என்று சொன்னார். பிறகு, அவருக்கு துண்டு விற்கும் நிலை ஏன் ஏற்பட்டது என்று கேட்டேன். அவருடைய பதில் எனது மனதைத் தொட்டு விட்டது.
நாள் முழுவதும் சாலையோரம் வெயிலில் நின்று துண்டுகளை விற்பனை செய்ததால் களைப்படைந்த ஒரு முதியவரை அவர் பார்த்திருக்கின்றார்.
இரக்கம் மேலிட அவருக்கு பணம் கொடுக்க முன்வந்தார்; ஆனால் அந்த முதியவர் பணத்தை ஏற்க மறுத்துவிட்டார். எனவே அவருக்கு உதவ முடிவு செய்த இளைஞர் அவர் சார்பாக துண்டுகளை பொதுமக்களிடம் விற்பனை செய்ய தொடங்கி விட்டார்.
அவருடைய பெயர் ஆதித்யா ....... ஒரு உண்மையான மென்மையான மனிதன். அவரிடம் 'நான்' என்னும் அகங்காரம் கொஞ்சம்கூட இல்லை. அவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த பலர் இந்த உலகிற்கு தேவை. நாங்கள் உங்களை விரும்புகிறோம் ...... நீங்கள் எங்களுக்கு ஒரு உத்வேகம்"
இந்த பதிவு படிக்க மிகவும் நன்றாக இருந்ததுடன், எனது மனதையும் தொட்டது.
Rupali Thombre
quora
அனுப்பியவர்:
தேவிகா
சிங்கப்பூர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments