Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-19


அழுக்காறாமை

குறள் மொழி 54

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

குறள் எண் :165

குறள் மொழியின் பொருள்:

பொறாமை உடையவரைத் துன்புறத்த: அழித்துவிட; தீங்கு தர அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யாவிடினும் அவரது பொறமைக் குணமே அவருக்குத் தீங்கு விளைவிக்கும்.

நபிமொழி:

நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல். பொறாமைக் குணம் ஒருவரது நற்செயல்களைச் சாம்பலாக்கி விடும்.
நூல் அபூதாவூத்ஒழுக்கமுடைமை

குறள் மொழி 55

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

குறள் எண் :131

குறள் மொழியின் பொருள் :

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பினைக் கொடுக்கும். எனவே ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாகக் கருதிப் போற்ற வேண்டும்.

நபிமொழி :

ஒழுக்கம் அனைவருக்குமானாது. அது அனைத்து நலன்களும் தரும். ஆதலால், "உங்களில் சிறந்தவர் எனப்படுபவர் ஒழுக்கத்தில் சிறந்தவரே!” என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதைப் பேணுங்கள்.
-அண்ணல் நபிகளார் (ஸல்) நூல் : புகாரி

(தொடரும்)

 


Post a Comment

0 Comments