
சந்திர ஒளி ஊடறுக்க முடியாதவாறு நெருக்கமாக நீண்டு வளர்ந்திருந்த மரங்கள் காணப்பட்ட வனப்பகுதியினூடாக நடந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒளி வழங்க பாதையின் இரு மருங்கிலும் காய்ந்திருந்த புற்களுக்கு நெருப்பு மூட்டியவராக முன் சென்றுகொண்டிருந்தவரும், மற்றவர்களும் அந்த சத்தம் கேட்டு ஸ்தம்பித்து நின்றனர்!
அம்பு பட்ட மிருகமொன்று தூரத்தில் துடித்துக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது மகிழ்ச்சிப் பெருக்கால் தமது விரல்களை வாயினுள் நுழைத்து ஒருசேர எழுப்பிய ஓசையினால் அந்த வனப்பகுதி முழுவதுமே கிளுகிளுத்துப் போனது!
நடந்து சென்றுகொண்டிருந்த அவர்கள் ஓடோடிச்சென்று, உயிர்விட்டுக்கொண்டிருந்த அந்த மிருகத்தைச் சுற்றி நின்றவாறு மிருகத்தின் உயிர் போகும்வரை காத்து நின்றனர்!
மிருகத்திற்கு அம்பெய்திய ரெங்க்மாவின் தந்தை மெத்தனமாக நடந்து வந்து, சுற்றி நின்றவர்களை மெல்ல விலக்கிவிட்டு, உயிர் விட்டுக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமிசத்தை தம் கூட்டத்தினருக்குள் எவ்வாறு பங்கிடுவது என்று யோசிக்கலானார்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments