Ticker

6/recent/ticker-posts

தாழம்பூ சேலைக் காரி


தாழம்பூ சேலைக்காரி
தழதழக்கும் உடம்புக்காரி.
தால்லாட வச்சிப் போறா 
தவசோட மனசப் பாரு .

பொல்லாப்பு சொல்லவில்ல 
பொய்யும் நான் சொல்லவில்ல.
பொன்னுக்கு நிகரான புள்ள
பொன்னாரம் தேவையில்ல.

கண்ணோரம் மையலிட்டு
கண்ணாலே தையலிட்டு.
கண்ணா என்னை அலையவிட்டு
கண்ணாம்பூச்சி காட்டிப்புட்டு.

போனாளே போனாளே 
போதையை ஏத்திப்புட்டு.
போசாக்கு இழந்து நெஞ்சம் காதல் 
போதைக்குள் விழுந்தது கொஞ்சம்.

ஆர் .எஸ் . கலா


 


Post a Comment

0 Comments