
சீனாவின் செஜியாங் பகுதியைச் சேர்ந்த 82 வயது விவசாயி சென் அசோங், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக, கடந்த 105 நாட்களாகத் தினமும் 12 மணிநேரம் பயணம் செய்து வந்துள்ளார்.
அதிகாலை 4:30 மணிக்கே எழுந்து மனைவிக்கு உணவு சமைத்து, பல பேருந்துகள் மாறி மருத்துவமனைக்குச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். வெறும் அரை மணிநேர சந்திப்பிற்காக, நாள் முழுவதும் மருத்துவமனை வராண்டாவில் காத்திருந்து அவர் காட்டிய அன்பு பலரையும் வியக்க வைத்தது.
50 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் தன் மனைவி செய்த தியாகங்களை உருக்கத்துடன் நினைவுகூர்ந்த அசோங், அவரின் மருத்துவச் செலவிற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுள்ளார். இவரது நிலையை அறிந்த பொதுமக்கள், மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு உதவிகளை வழங்கினர். இருப்பினும், கடந்த மார்ச் 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவரது மனைவி உயிரிழந்தார்.
மனைவியின் மறைவால் நிலைகுலைந்துள்ள அசோங், "அவர் உலகின் மிகச்சிறந்த மனைவி, என் இதயமே நொறுங்கிவிட்டது" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் தன் மனைவியின் நினைவுகளுடனேயே வாழப்போவதாகவும், அவ்வப்போது அவரது கல்லறைக்குச் சென்று வரப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு விவசாயியின் இந்த மாறாத அன்பு, உண்மையான காதலுக்குச் சான்றாக அமைந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com







0 Comments