
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டு வரும் மோதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக சண்டையிடுகிறது. இதில் அமெரிக்கா பொருளாதார இழப்பை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் அதிநவீன மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான Patriot, THAAD போன்ற பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன.
ஆனால் ஈரான், மிகக் குறைந்த விலையிலான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு அவற்றைத் தாக்குகிறது.
உதாரணமாக, ஒரு சில லட்சங்கள் மட்டுமே மதிப்புள்ள ஈரானின் 'ஷாஹத்-136' ட்ரோனைச் சுட்டு வீழ்த்த, அமெரிக்கா பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏவுகணையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இது அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. ஈரானின் 'ஃபதா' போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 13 முதல் 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியவை.
இவை இலக்கை நோக்கிச் செல்லும்போது பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளால் இவற்றை இடைமறிப்பது கடினமாக உள்ளது. சுமார் 1,200 கி.மீ தூரத்தில் உள்ள இஸ்ரேலை வெறும் 5 முதல் 6 நிமிடங்களில் தாக்கும் வல்லமை படைத்தவை இந்த ஏவுகணைகள்.
அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி ஈரானின் 90% ஏவுகணைகளை அழித்துவிட்டதாகக் கூறினாலும், ஈரான் தொடர்ந்து தனது ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஏவுவதன் மூலம் எதிரி நாட்டுப் பாதுகாப்பு வளையத்தைத் திணறடிப்பது ஈரானின் முக்கிய உத்தியாக உள்ளது.
இது போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கிறது, இது ஒரு வாரத்தில் போரை முடித்துவிடலாம் என நினைத்த அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments