Ticker

6/recent/ticker-posts

"வளைகுடாவிலிருந்து அமெரிக்கா விலகினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்"


போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அமெரிக்கா அரேபிய வளைகுடாவை விட்டு வெளியேறவேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

அந்நாட்டின் உயர் அதிகாரி மோஸன் ரேஸாய் (Mohsen Rezaei) அவ்வாறு சொன்னார்.

அமெரிக்காவுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலும்
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

முதலில் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் சேதத்துக்கு அது முழு இழப்பீடு கொடுக்கவேண்டும். 

பின்னர் அந்த வட்டாரத்தை விட்டு வெளியேறவேண்டும். 

அப்போதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசக்கப்படும் என்று திரு ரேஸாய் கூறினார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்கினால் ஈரான் பதிலடி கொடுப்பதை நிறுத்தும் என்றும் திரு ரேஸாய் தெரிவித்ததாக ஈரானிய அரசாங்க ஊடகம் சொன்னது.

seithi


 


Post a Comment

0 Comments