Ticker

6/recent/ticker-posts

நீண்ட காலத்துக்குப் பின் நிம்மதியாக கழிந்த ரமலான்: அல்ஹம்துலில்லாஹ் !


எமது நாட்டு அரசியலில், அரசியல் வாதிகளின் இனவாத அரசியலுக்காக புனிதமிக்க ரமலான் மாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

இனவாதிகளின் அரசியலுக்காக,  இனவாதிகளின் அரசியலை தக்க வைத்துக்கொள்ள ரமலான் மாதமும் பயன்படுத்தப்பட்டது.

கிரீஸ்மேன், தர்கா நகர் பிரச்சினை, குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் ரமலான் மாதங்களில், அல்லது ரமலானை அன்மித்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் பாதிப்புகள் தொடர்ந்து ரமலான் மாதத்தையும் பாழ் படுத்தியது.

கிரீஸ் மேன்.

கிரீஸ் மேன் என ஒரு குழு அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டு,  இக்குழு நாடலாவியரீதியில் செயல்பட்டு நாட்டில் ஒரு அச்சமான சூழலை உருவாக்கியது.

பெண்கள் பள்ளிவாசல் செல்ல பயந்தார்கள், ஆங்காங்கே சில கிரீஸ் மேன்கள் மக்களால் பிடிக்கப்பட்டபோது போலீசார் வந்து அவர்களை கூட்டிச் செல்வார்கள். இத்திரைப்படம் அரசியல் பின்னணியில் சிறிது காலம் ஓடியது.

அதனை அடுத்து ரமலானுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தர்கா நகர் கலவரம், நாட்டில் ஒரு பயங்கரமான நிலையை உருவாக்கியது .

மக்கள்  இரவு நேரங்களில் வெளியே செல்ல பயந்தார்கள்.பள்ளிவாசல்கள் நேர காலத்துடன் இழுத்து மூடப்பட்டது.

அதற்கு அடுத்து குண்டு வெடிப்பு பிரச்சினை, அரசியலில்  ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக  நடாத்தப்பட்ட மன்னிக்க முடியாத மாபெரும் கொடூர குண்டு வெடிப்பு,  இது அக்கால கட்டத்தில் முஸ்லிம்களை வரலாறு காணாத விதத்தில் பாதித்தது. 

இரவு நேரங்களில் பள்ளிவாசல்கள் வெறிச்சோடி கிடந்தன. இரவு 9 மணியுடன் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டது. பள்ளிவாசலில் இருந்த மக்கள் விரட்டப்பட்டார்கள். 

சரியாக பள்ளிவாசல் முடியும் தருவாயில் போலீசார் வந்து மக்களை வீடுகளை நோக்கிப் போகும்படி கூறுவார்கள். 

இவ்வாறான அட்டூழியங்களும் அநியாயங்களும் முஸ்லிம் சமூகத்தை வாட்டி வதைத்தன. இத்தனையும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அரசியல் தேவைக்காக செய்யப்பட்ட அட்டூழியங்களாகும்.

அல்ஹம்துலில்லாஹ்,

இம்முறை ரமலானை பொறுத்தவரையில்,  நாட்டில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாததன் காரணமாக, மக்களின் வியாபாரங்கள் வருமானங்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் காணப்பட்டது.

நாட்டின் நாலா பகுதிகளிலும் தனவந்தர்கள்  வறிய மக்களுக்கு வாரி வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது.

எதிர்வரும் ரமலான்களிலும் இது போன்ற பரக்கத்துகளை அல்லாஹுத்தஆலா நம் சமூகத்திற்கு பல மடங்காக பெருக்கிக் கொடுக்க வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது
ஒரு குறிப்பிட்ட கூட்டம் அரசியலுக்காக கொலை செய்வதும் அட்டூழியங்களை செய்வதும் மோசமான அரசியல் கலாச்சாரத்தில் உள்ள ஒரு வழிமுறை.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால், முஸ்லிம் சமூகம் என்று சொல்லிக் கொள்ளும் நமக்குள்ளேயே  உள்ள ஒரு கூட்டம் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது மிக கவலையான ஒரு விடயமாகும்.
தங்களின் சுயலாபங்களுக்காக சில அரசியல்வாதிகளிடம்  கிடைக்கும் அசிங்கமான துட்டுகளுக்காக இவற்றை, இந்த அட்டூழியங்களை சரிகான்பது வியப்பாக உள்ளது.

நம் கண் முன்னே இத்தனை அநியாயங்களும், அட்டூழியங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டும், இவற்றைக் கண்ணால் பார்த்த பிறகும் இவர்களின் நிலையை பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது !

அரசியல் என்பது அவரவர் விருப்பம், அதில் பூரண உரிமை அவர்களுக்கு உண்டு, . ஆனால் சமூகம் மார்க்கம் என வரும்போது அது சம்பந்தமான கடமைப்பாடு ஒவ்வொருவர் மீதும் விதியாகிறது. 

எனவே இப்புனித ரமலான் மாதத்தில் இது சம்பந்தமான தெளிவையும் கடமைப்பாட்டையும் அல்லாஹுத்தஆலா இவர்களுக்கு தெளிவுபடுத்துவானாக.
ஆமீன்.

பேருவளை ஹில்மி 

 


Post a Comment

0 Comments